தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் டின் எல்கர் பும்ரா வீசிய முதல் ஓவரில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் இந்திய வீரர் முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். எனினும் ஆட்டத்தின் 11ஆவது ஓவரை வீசும் போது கால் சறுக்கி கீழே விழுந்த பும்ரா களத்தில் இருந்து வெளியேறினார்.
தேநீர் இடைவேளைக்கு பிறகு இந்திய வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தவித்தது. இறுதியில் முகமது ஷமியின் வேகத்தில் தென்னாப்பிரிக்க அணி 197 ரன்களுக்கு சுருண்டது. முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். பும்ரா மற்றும் ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமி தன்னுடைய 200ஆவது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மாயங்க் அகர்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் முகமது சிராஜ் ஒரு விக்கெட் வீழ்த்தினார். அந்த விக்கெட்டிற்கு பிறகு அவர் வழக்கம் போல் கொண்டாடினார். அவருடைய கொண்டாட்ட படத்தை பதிவிட்டு பலரும் அவரையும் கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவையும் ஒப்பிட்டு கூறி வருகின்றனர்.
இவ்வாறு பலரும் முகமது சிராஜ் மற்றும் கால்பந்து வீரர் ரொனால்டோவையும் ஒப்பிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: எங்களுடைய ராக் வந்துவிட்டார்... பும்ராவை புகழ்ந்த கோலி- ட்விட்டரில் புயலை கிளப்பிய ரசிகர்கள் !