புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஓட்டல்களில் மது விற்பனைக்கு கலால் துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படவில்லை. இதற்கிடையே புதுவை அரசு வருகிற புத்தாண்டை கொண்டாட முழு தளர்வு அளித்துள்ளது.


Annapoorani Arasu Amma : அன்னபூரணி அரசு அம்மா மீது இந்து மக்கள் கட்சி புகார்


இதனால் புதுவை கடற்கரை, நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் திறந்தவெளிகளில் மத்திய, மாநில அரசுகளின் கொரோனா வழிபாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புத்தாண்டை கொண்டாட அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி புத்தாண்டு கொண்டாடத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.



Annapoorani Arasu Amma: பில்லா மோதிரம்.. அரபு வளையல்..ஹைடெக் அம்மனின் பேஷன் அவதாரம்!


தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் புத்தாண்டுக்கு அரசு தடை விதித்துள்ளது.  இதனால் புதுவைக்கு வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சுற்றுலாவை மேம்படுத்தவும், அரசின் வருவாயை பெருக்கும் நோக்கிலும், மது விற்பனை அனுமதியில்லாத ஓட்டல்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.


அதன்படி இதுவரை ஓட்டல்களில் மதுவிற்பனை செய்ய 40 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கலால் துறைக்கு வந்துள்ளது. இதற்காக நாளொன்றுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கலால் துறையில் பெறப்படும் விண்ணப்பங்களை அதிகாரிகள் விரைந்து பரிசீலனை செய்து அதற்கான சிறப்பு அனுமதியை உடனடியாக வழங்கி வருகிறார்கள்.


Rajini on Tuticorin Protest: எனக்கு எதுவும் தெரியாது..தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ரஜினி விளக்கம்



Omicron : திருவாரூரில் ஒமிக்ரான் பாதிப்பு? மாவட்ட ஆட்சியர் விளக்கம்


சிறப்பு அனுமதியுடன் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது வழங்கக்கூடாது, அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தகவலை புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.


 மேலும் படிக்க: நிர்வாண புகைப்படம், வீடியோவை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை.. சிக்கிய சைக்கோ


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண