வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பல தடைகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.


நீண்ட வருடங்களாக ஒரு வெற்றிக்கு காத்திருந்த சிம்புவுக்கு இந்தப் படம் அதனை கொடுத்துள்ளது. மாநாடு வெற்றியைத் தொடர்ந்து சிம்புவின் க்ராஃப் ஏற தொடங்கியுள்ளது. பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் சிம்புவின் கால்ஷீட் கேட்டு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.




படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் பாராட்டிவருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவுக்கு தனது வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.


 


 






இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் மாநாடு படக்குழுவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தாமதமாய் “ மாநாடு “ பார்த்ததிற்கு மன்னிக்கவும். ரசித்து பார்த்தேன். சிலம்பரன், எஸ்.ஜே. சூர்யா அருமை. நண்பர்கள் யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இது விடாமுயற்சிக்கும் அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி” என பதிவிட்டுள்ளார்.




முன்னதாக சிம்புவை வைத்து செல்வராகவன் ‘கான்’என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. அதற்கான போஸ்டரும் வெளியானது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: ‛எனக்கு 3வதும் இல்லை... 4வதும் இல்லை...’ கணவர்கள் எண்ணிக்கை பற்றி மவுனம் கலைத்த அவதாரம் அன்னபூரணி!


INDvsSA: இவங்க இரண்டு பேரும் ஒரே மாதிரி..- சிராஜை ரொனால்டோவுடன் ஒப்பிட்ட ரசிகர்கள் !


Atrangi Re Twitter Review: ‛வாட்ட மேன்... என்ன பையன்ப்பா நீ...’ தனுஷின் ‛கலாட்டா கல்யாணம்’ ட்விட்டர் ரிவியூ!