மேலும் அறிய

மேல்சிகிச்சைக்கு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் கர்ப்பிணி உயிரிழப்பு - விழுப்புரம் அருகே சோகம்

விழுப்புரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மேல்சிகிச்சைக்கு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் கர்ப்பிணி உயிரிழப்பு.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மண்டகமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் சந்தியா (வயது 23). இவருக்கும் முகையூர் ஒன்றியம் சத்தியகண்டனூர் கிராமத்தை சேர்ந்த திருமலை என்பவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஹனிஷ்கா 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தற்போது, சந்தியா 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். நேற்று முன்தினம் தனது தாய் வீடான மண்டகமேடு கிராமத்திற்கு சென்றார். அங்கு தங்கியிருந்த போது இரவு 12 மணியளவில் அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை பாவந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவரது உடல்நிலை சரியாகாத காரணத்தினால், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல செவிலியர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், அவரை அழைத்து செல்வதற்கான ஆம்புலன்ஸ் வசதி அங்கு இல்லை. இதையடுத்து 12.20 மணிக்கு மேல் 108 ஆம்புலன்சுக்கு சந்தியாவின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தும் உடனடியாக வரவில்லை.

இரவு 2.30 மணி வரைக்கும் ஆம்புலன்ஸ் வராத காரணத்தினால், சந்தியா உரிய சிகிச்சை கிடைக்காமல் பாவந்தூர் ஆரம்ப சுகதார நிலையத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இந்நிலையில், 2.30 மணிக்கு பின்னர் அங்கு ஆம்புலன்ஸ் வந்தது. தொடர்ந்து அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சந்தியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதனர். இதுகுறித்து அவரது தாய் சுமதி (45) கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LSG vs DC LIVE Score: நெருக்கடியில் களமிறங்கும் டெல்லி - லக்னோ; டாஸ் வென்ற லக்னோ பந்து வீச முடிவு!
LSG vs DC LIVE Score: நெருக்கடியில் களமிறங்கும் டெல்லி - லக்னோ; டாஸ் வென்ற லக்னோ பந்து வீச முடிவு!
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rahul Gandhi on Modi | ‘’அதானிக்கு 7 ஏர்போர்ட்..டெம்போல பணம் வந்துச்சா மோடி?” ராகுல் THUGLIFE!Banana Farming | தருமபுரியில் கொளுத்தும் வெயில்! காய்ந்து விழுந்த வாழை மரங்கள்! விவசாயிகள் வருத்தம்Felix Gerald House Raid | FELIX வீட்டில் அதிரடி சோதனைடென்ஷன் ஆன மனைவிபோலீசாருடன் கடும் வாக்குவாதம்Sanjiv goenka scolding KL Rahul | CSK-வில் ராகுலா? பதறிய பயிற்சியாளர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LSG vs DC LIVE Score: நெருக்கடியில் களமிறங்கும் டெல்லி - லக்னோ; டாஸ் வென்ற லக்னோ பந்து வீச முடிவு!
LSG vs DC LIVE Score: நெருக்கடியில் களமிறங்கும் டெல்லி - லக்னோ; டாஸ் வென்ற லக்னோ பந்து வீச முடிவு!
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.. மூச்சுத்திணறலால் ஒருவர் உயிரிழப்பு!
டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.. தலைநகரில் பரபரப்பு!
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
Embed widget