திண்டுக்கல் மாவட்டம் பழனி சத்யா நகர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவிகள் விடுதியில் பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இந்தநிலையில் விடுதி மாணவிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் உள்ள அதிகாரிகள் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தொடர்பு எண்களை தெரிவித்தனர். இந்த சூழலில் அதிகாரிகள் கொடுத்த தொலைபேசி என்னை தொடர்பு கொண்ட மாணவிகள் சிலர் கொடுத்த தகவல் மற்றும் புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல துறை அதிகாரிகள் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது விடுதியில் தங்கியுள்ள பள்ளி மாணவிகள் சிலர் இவ்விவகராத்தில் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக மாணவிகள் சிலர் மாவட்ட குழந்தைகள் காப்பகம் அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டு அதிகம் கிடைத்த தகவல் படி, பழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பழனி சத்யா நகரை சேர்ந்த கிருபாகரன், ராகுல், பரமானந்தம், மற்றும் 18 வயதான கல்லூரி மாணவன் ஒருவர் உட்பட 5 பேரை பழனி அனைத்து மகளீர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணை முடிவில் பழனி சத்யாநகரை சேர்ந்த கிருபாகரன், ராகுல், பரமானந்தம், மற்றும் 18 வயது கல்லூரி மாணவர் ஆகியோர் தான் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேர் மீதும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விவகாரத்தில் ஆதிதிராவிடர் விடுதியில் அலட்சியமாக பணிபுரிந்ததாக கூறி விடுதி காப்பாளர் அமுதா விடுதி காவலாளி விஜயா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்