மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி பயிர்கள் சுமார் 1.40 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக  மாவட்டம் முழுவதும் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அவ்வப்போது பெய்யும் மழை விவசாயிகள் பெரும் இன்னல்களை சந்தித்து விவசாயத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் ‌. 


Weight Loss Inspiration : குண்டா இருக்கோம்னு கவலைப்படறீங்களா? போனி கபூர் மகளின் போஸ்ட் ஒரு பாடம்..




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலை சேர்ந்தவர் ராஜதுரை என்ற விவசாயி தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாகுபடி செய்த நெல்லை அறுவடை முடிந்து, ஆன்லைன் மூலம் பதிவு செய்து, தனது வயலில் விளைந்த சுமார் 100 மூட்டையை நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்துள்ளார்.


TET Notification 2022: ஆசிரியர் தகுதித் தேர்வு: மார்ச் 14 முதல் எப்படி விண்ணப்பிக்கலாம் : முழு விவரம்..




அதனைத் தொடர்ந்து நெல் மூட்டைகள் விற்பனை செய்ததிற்கான ஒரு லட்சம் ரூபாய் பணத்தை தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம்  நேரடி கொள்முதல் நிலையம் மூலம் ராஜதுரையின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பணத்தை ராஜதுரை வைத்தீஸ்வரன்கோயில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து பெற்றுக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வைத்து வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.




அப்பொழுது வைத்தீஸ்வரன்கோயில் கடைவீதியில் தனது இருசக்கர நிறுத்தி விட்டு தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர் வண்டி வைத்திருந்த ரூபாய் ஒரு லட்சம் பணத்தை திருடி விட்டு சென்றுள்ளனர். ராஜதுரை வண்டி வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கம் தேடியும், பலரிடம் விசாரித்தும் பணம் கிடைக்காததால்,  இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோயில்  காவல் நிலையத்தில் புகார் செய்தார். ராஜதுரையின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வைத்தீஸ்வரன் கோயில் காவல்துறையினர் இவரிடம் பணம் இருப்பதை அறிந்த இவருக்கு நெருக்கமானவர்கள், அல்லது வங்கியில் இவர் பணம் பெறும் போது அருகில் இருந்த நபர்கள் யாரேனும் இவரை பின் தொடர்ந்து  பணத்தை திருடிச்சென்றிருக்கலாம் என்ற கோணங்களில் சிசிடிவி காட்சி ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.