பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் இவர் தயாரித்த வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் ஹெச்.வினோத், நடிகர் அஜித் உடன் மற்றொரு தமிழ் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். 


இந்நிலையில் இவருடைய இளைய மகளான அனுஷூலா கபூர் தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் அவருடைய உடல் எடை குறைப்பு தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு உணர்ச்சி பொங்கும் பதிவை செய்துள்ளார். அதில், “எனக்கு தற்போது உடல் ஆரோக்கியம் என்பது என்னவென்றால், நான் கண்ணாடி முன்பு பார்க்கும் என்னுடைய தோற்றத்தைவிட மிகவும் அதிகமான ஒன்று. ஏனென்றால் முதலில் நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது என்னுடைய மனதளவில் நான் சரியாக இல்லை என்பது முதலில் ஒத்துக்கொண்டேன். அதன்பின்னர் அதிலிருந்து எப்படி மீண்டும் மீள்வது என்பது தொடர்பாக யோசித்தேன். அது மிகவும் கடினமான ஒன்று. 






இதற்காக மனநல ஆலோசனை பெற வேண்டி இருந்தது. இந்த பயணத்தின்போது எனக்கு நிறையே பயம்,என்மேல் சந்தேகம் ஆகியவை இருந்தன. அதற்கு பின்பு எனக்கு என்னை பற்றி புரிய தொடங்கியது. அப்போது என்னுடைய மனம் நன்றாக மாற தொடங்கியது. இது ஒரு 2 வருட நீண்ட நெடிய பயணமாக அமைந்தது. இந்தப் பயணத்தின் போது என்னுடைய மதிப்பு உடல் எடை மற்றும் தோற்றத்தை வைத்து இல்லை என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அது எனக்கு எந்தவித நன்மையையும் தரப்போவதில்லை என்பதை தெரிந்துக் கொண்டேன். என்னுடைய குறைபாடுகளையும் நான் ரசிக்க பழகி கொண்டு வருகிறேன். இது மிகவும் முக்கியமான பயணம் ” எனப் பதிவிட்டுள்ளார். 


அவரின் இந்த உடல் எடை குறைப்பு மற்றும் இந்த உணர்ச்சிகரமான பதிவு ஆகியவற்றை பல பாலிவுட் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக அவருடைய சகோதரியும் நடிகையுமான ஜான்வி கபூர், “சிறப்பான மாற்றம். இனி நீ உயர்வாக முன்னேறு” எனப் பதிவிட்டுள்ளார். அனுஷூலாவின் இந்தப் பதிவு வேகமாக வைரலாகி வருகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண