ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம் இன்னும் தொடரும் நிலையில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து பாதுகாப்பான முதலீட்டிற்கு முயற்சி செய்து வருகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்வது சமீப காலங்களில் குறைந்து வந்தன. இதனால் கடந்த ஒரு வார காலமாக சென்செக்ஸ், நிஃப்டி தொடர்ந்து கடும் சரிவை சந்தித்து வந்த்து. இந்த வாரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்,  மீண்டும் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து சரிவிலிந்ருந்து உயர்ந்தது. 


இந்தநிலையில் இந்திய பங்குச்சந்தைகள் இன்று வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. காலை 9:20 மணி நிலவரப்படி, பிஎஸ்இ சென்செக்ஸ் 453 புள்ளிகள் அல்லது 53,936.53 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
என்எஸ்இ நிஃப்டி 133 புள்ளிகள் அல்லது 0.83 சதவீதம் உயர்ந்து 16,147 ஆக இருந்தது. 


டைட்டன், இண்டஸ் வங்கி, இன்ஃபோசிஸ்,பவர்க்ரிட்,சன் ஃபார்மா, டெக் எம்,  ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமானது. அதேசமயம், ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, நெஸ்லே, பார்தி ஏர்டெல் ஆகியவற்றின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. சந்தைகளில், பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 0.7 சதவீதம் வரை உயர்ந்தது. 


நிஃப்டி எண்களில் வங்கிகள் மற்றும் மெட்டல்ஸ் ஆகியவை முறையே 0.3 சதவீதம் மற்றும் 0.5 சதவீதம் சரிந்து நஷ்ட்டத்தில் வர்த்தகமாகின. ஆட்டோமொபைல், ஐடி, பார்மா ஆகியவற்றின் பங்குகள் சற்று உயர்வுடன் இருந்தன. டெக் ம்கேந்திரா, மைண்ட் ட்ரீ, ஹெச்.சி.எல்.ஜென்சார், எல்&டி போன்ற நிறுவனத்தின் பங்குகளும் லாபத்துடன் வர்த்தகமாகின.


சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, பங்குச் சந்தை நிலையில்லாத் தன்மை ஆகிய காரணத்தினால் உலக அளவில் அத்தியாவசிய பொர்ருட்களின் விலை கடுமையாக பாதிப்படைந்தது. 
இந்தியாவில் இதன் எதிரொலி பெட்ரோல், டீசல் விலையில் பிரதிபளிக்கும். இதுகுறித்து நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீத்தராமன் கூறுகையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு நாட்டின் பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். ஆனால் இதுபோன்ற சூழலை கையாள பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், இந்த அளவிற்கு பாதிப்பை சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை. நிலைமை எப்படி இருக்கிறதோ அதைகேற்றவாறுதான் முடிவெடுக்க முடியும் என்றார். 


பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றத்துடன் வர்த்தகம் ஆகுமா என்பது ரஷ்யா- உக்ரை போர் சூழலை பொருத்துதான் அமையும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண