மும்பையில் ஒரு அபார்ட்மெண்ட் மாடியில்  20 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஆடையின்றி அவரது உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை குர்லா நகரில் உள்ள அடுக்குமாடி அபார்ட்மெண்டில் இந்த கொடூரம் சம்பவம் நடந்துள்ளது.


மொட்டை மாடியில் பெண்ணின் சடலத்தை கண்ட இளைஞர்கள்


18 வயது இளைஞர் ஒருவர் தனது இரண்டு நண்பர்களுடன் குர்லா பகுதியில் உள்ள காலி கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு வீடியோ பதிவு செய்ய சென்றுள்ளனர்.  அப்போது, மொட்டை மாடியில் பெண்ணின் சடலம் நிர்வாணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம்பெண்ணின் உடலை மீட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது என்று காவல்துறை துணை ஆணையர் பிரனய் அசோக் தெரிவித்தார். மேலும் படிக்க: பாலியல் வன்கொடுமையால் பிறந்த குழந்தை... அவமானத்தால் கொன்ற 15 வயது சிறுமி!


இந்த சம்பவம் தொடர்பாக  வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த செப்டம்பர் மாதம், மும்பையின் சகினாகா பகுதியில் 30 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவரது அந்தரங்க உறுப்பும் கம்பியால் சிதைக்கப்பட்டது. நகரில் உள்ள மருத்துவமனையில் 33 மணிநேரம் உயிருக்குப் போராடிய அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் ஒரே குற்றவாளியான மோகன் சவுகான் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே ஏற்பட்ட பணத் தகராறுதான் இந்தக் குற்றத்திற்கு வழிவகுத்ததாக போலீஸார் தெரிவித்தனர். மாமியாருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரம் - சொந்த நண்பரை வெட்டிய மருமகன் கைது


பாதிக்கப்பட்ட பெண்ணின் மரணத்திற்குப் பிறகு, மாநில தலைநகரில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல் மற்றும் மொபைல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணியை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை காவல்துறை ஆணையர் ஹேமந்த் நாக்ராலே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண