பாலியல் வன்கொடுமையில் பிறந்த குழந்தையை கழுத்து நெறித்து கொன்றதாக 15 வயது சிறுமி கைது செய்யப்பட்டு சீர்த்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.


மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தனது 40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றதாக போலீஸார் கூறினார். அம்மாநிலத்தின் டாமோ மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தச் சிறுமி அவமானப்படுத்தப்பட்டதால் குழந்தையை கொன்றதாக கூறப்படுகிறது.



சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் கர்ப்பமானார்


அந்த சிறுமி அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்தச் சிறுவன் கடந்த பிப்ரவரி மாதம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கருவுற்றதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சிறுமியின் குடும்பத்திற்கு ஆகஸ்ட் மாதம் தெரியவந்தது. மேலும் படிக்க: பள்ளிக்கு படிக்க சென்ற கணவன்...மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனார்..!


சிறுமி வயிற்று வலியால் துடித்தபோது, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது, டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக குடும்பத்தினரிடம் கூறினர். பின்னர், சிறுமி தனது குடும்பத்தாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். இதையடுத்து, உறவினர்கள் சிறுவன் மீது போலீசில் புகார் அளித்தனர்.


சிறுவன் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டான்


போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்ததை அடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் அவனை கைது செய்தனர். பின்னர், சிறுவன் சீர்த்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டார். மேலும் படிக்க: புடவை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் எஸ்கேப் - டிப்டாப் பி.டெக் பட்டதாரி பெண்ணை கேட்ச் செய்த போலீஸ்


குழந்தை கழுத்தை நெரித்து கொலை


சிறுமி அக்டோபர் 16ஆம் தேதி  ஒரு மாவட்ட மருத்துவமனையில் தனது குழந்தையைப் பெற்றெடுத்தார்.  நவம்பர் 5 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஐந்து நாட்களுக்குப் பிறகு, சிறுமி டெண்டுகேடாவில் உள்ள உள்ளூர் சமூக சுகாதார மையத்திற்கு குழந்தையுடன் திரும்பினார். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று சுகாதார ஊழியர்களிடம் கூறினார். இதையடுத்து, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை கழுத்தை நெரித்து இறந்தது தெரியவந்தது. மேலும் படிக்க: காரில் நடன பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை... கதறியதால் சுற்றி வளைத்த போலீஸ்... சென்னையில் அதிர்ச்சி!


முதற்கட்ட விசாரணையில், சிறுமி குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார்.  அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு,  காவலில் வைக்கப்பட்டு சிறார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், சிறுமியும்சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண