சென்னை புளியந்தோப்பு கே. எம் கார்டன் 13 ஆவது தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (40). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். புளியந்தோப்பு கே.எம் காலனி 13 ஆவது தெருவில் ஆட்டோ ஓட்டி கொண்டு வரும் போது இரண்டு நபர்கள் வழிமறித்து மணிவண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் தலை வலது தோள்பட்டை மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த மணிவண்ணன் அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 



 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார் விசாரணை செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் புளியந்தோப்பு சூளை தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்கின்ற உள்ள குள்ளா (23) என்ற நபரின் மாமியார் ஈஸ்வரி. மணிவண்ணன் இருக்கும் அதே பகுதியில் வசித்து வருவதாகவும் மணிவண்ணன் அடிக்கடி தனது மாமியார் வீட்டிற்கு சென்று இருவரும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை பலமுறை பிரகாஷ் கண்டித்தும் மணிவண்ணன் அதனை மீறி பிரகாஷின் மாமியாருடன் பழகி வந்த காரணத்தினால் ஆத்திரமடைந்த பிரகாஷ் தனது நண்பர் சரத் சந்திரன் (20) என்பவருடன் சேர்ந்து மணிவண்ணனை வெட்டியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரகாஷ் மற்றும் சரத் சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 



 

வியாசர்பாடி காப்பகத்தில் இருந்து 3 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

 


 

சென்னை வியாசர்பாடி சுந்தரம் மெயின் ரோடு பகுதியில் டான்பாஸ்கோ குழந்தைகள் நல காப்பகம் இயங்கி வருகிறது 120  ஏழை குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர் இந்த காப்பகத்தில் இருந்து14 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் மற்றும் 13 வயது சிறுவன் என மூன்று பேர் காப்பகத்தில் இருந்து வெளியேறி உள்ளனர். இவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காப்பகத்தின் உரிமையாளர் ஆப்ரகாம் அருள் ஜெயம் (23) என்பவர் மூன்று சிறுவர்களை கண்டுபிடித்துத் தரும்படி வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 சிறுவர்களையும் தேடி வருந்த நிலையில் 2 பேர் கடற்கரைக்கு சுற்றி பார்க்க சென்றதும் , ஒருவர் தனது வீட்டிற்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று கொண்டு இருக்கின்றது.