தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் மதுபான மொத்த கிடங்கில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விற்பனைக்காக மதுபாட்டில்கள் லாரிகளில் வருவது வழக்கம். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மகாதானத் தெருவில் அரசுக்கு சொந்தமான 5646 எண் கொண்ட டாஸ்மாக் மதுபானக் கடைக்கு நேற்று மாலை லாரியில் மது பாட்டில்கள் வந்து இறங்கியது. அதனை டாஸ்மாக் கடை ஊழியர்கள் டாஸ்மார்க் கடைக்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர். 




மதுபாட்டில்கள் திருட்டு:


அப்போது அதனை மதுபான கடை அருகில் இருந்த இரண்டு இளைஞர்கள் நோட்டமிட்டு திடீரென லாரியில் இருந்து ஊழியர்கள் மது பெட்டிகளை கடை உள்ளே எடுத்து சென்ற போது,  லாரியில் இருந்து 48 குவாட்டர் பாட்டில் அடங்கிய (பிலாக் பேர்ல்) ஒரு பாக்ஸ் மது பாட்டில்களை குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு கண்ணிமைக்கும் நொடியில் உயர்ரக இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதனை கண்டு லாரியிலிருந்து ஊழியர் இறங்கி விரட்டி சென்றும் அந்த இளைஞர்களை பிடிக்க முடியவில்லை. 


Thalapathy 68 Update: போடு வெடிய..! தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..- வெங்கட் பிரபு - யுவன் கூட்டணி




திருடி சென்ற மது பாட்டில் ஒன்றின் விலை 130 ரூபாய் எனவும், 48 48 மதுபாட்டில்களின் மொத்த விலை 6140 என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் (சூப்பர்வைசர்) சுரேந்திரன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவை வைத்து இளைஞர்களை தேடி வருகின்றனர். இளைஞர்கள் மது பாட்டில்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், மது கடைகளை மூட வேண்டும் என கூறும் ஒரு சில இளைஞர்கள் மத்தியில், இது போன்று இளைஞர்கள்  மது பாட்டில்களை திருடி செல்லும் சம்பவங்களும் நடந்தேறி வருகிறது. 


The Kerala Story: 'தி கேரளா ஸ்டோரி' படத்தை பார்த்த அதாஷர்மாவின் பாட்டி என்ன சொன்னார் தெரியுமா..?


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற