Mayiladuthurai: வரதட்சணை கொடுமையால் பெண் உயிரிழப்பு? - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தில்லையாடியில் பெண் உயிரிழப்பில் மர்மம் உள்ளதாக அப்பெண்ணின் உறவினர்கள்  உடலை பெற மறுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள தில்லையாடி உத்திராபதியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 36 வயதான செந்தில்குமார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் நளமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் 28 வயதான மகள் மதுபாலா, இவர்கள் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இருவீட்டார்கள் இணைந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

Continues below advertisement


திருமணத்தின்போது பெண் வீட்டார்  17 சவரன் தங்க நகைகள், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களை வரதட்சணையாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது செந்தில்குமார் வெளிநாட்டில் வேலை செய்துவந்த நிலையில், செந்தில்குமார் மற்றும் அவரது வீட்டில் உள்ளோர் மேலும், 10 லட்சம் ரூபாய் பணம், 10 சவரன் தங்க நகை கேட்டு கடந்த சில மாதங்களாக மதுபாலாவை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி தில்லையாடி வீட்டில் மதுபாலா மர்மமான முறையில்  தூக்கிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

Southern Railway :மழை நீர் தேக்கம்... சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 7 ரயில் சேவைகளில் மாற்றம்...


தகவலறிந்து அதிர்ச்சியடைந்த மதுபாலா குடும்பத்தினர், உடனடியாக தில்லையாடி சென்று செந்தில்குமார் குடும்பத்தாரிடம், மதுபாலா மரணத்தில் மர்மம் இருப்பதாக பொறையார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பொறையாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Greece Boat Accident : தொடரும் துயரம்.. நடுக்கடலில் கவிழ்ந்த படகு... கொத்து கொத்தாக மரணங்கள்...300 பேர் உயிரிழப்பு...


தொடர்ந்து மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில், மதுபாலாவின் உடல் இன்று உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது. இதனிடையே செந்தில்குமார் வெளி நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு செந்தில்குமாரிடம் பொறையார் காவல்துறையினர் மற்றும் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் செந்தில்குமார் மற்றும் அவர் குடும்பத்தார் மீது உரிய நடவடிக்கை எடுத்தால்தான் உடலை பெற்றுக் கொள்வோம் என்று கூறி உறவினர்கள் மதுபாலாவின் உடலை வாங்க மறுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

IAS Officers Transfer: தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்..! யார் யார் மாற்றம்..?

 

Continues below advertisement
Sponsored Links by Taboola