தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. எரிசக்தி துறை முதன்மைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக ரமேஷ் சந்த் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.
- வணிக வரித்துறை இணை ஆணையராக வீர் பிரதாப் சுங் நியமனம்
- பட்டு வளர்ப்புத்துறை இயக்குநராக பணியாற்றி வந்த விஜயா ராணி, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமனம்.
- சிறுபான்மையினர் நல இயக்குநராக ஆசியா மரியம் நியமனம்.
- தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் முதன்மை செயலாளர், தலைவர், நிர்வாக இயக்குனராக விஜயகுமார் நியமனம்.
- பட்டு வளர்ப்புத்துறை இயக்குநராக சந்திரசேகர் சகாமுரி நியமனம்.
- அடையாறு கூவம் மறுசீரமைப்பு திட்ட சிறப்பு அலுவலராகவும் விஜயகுமாருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு சிறு தொழில் கழகத்தின் (டான்சி) முதன்மை செயலாளர், தலைவர், நிர்வாக இயக்குநராக ஸ்வர்ணா நியமனம்.
- தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் (டான்செம்) நிர்வாக இயக்குநராக ஆர். கண்ணன் நியமனம்.
- நாகை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை முகமையின் திட்ட அலுவலராக ரஞ்சித் சிங் நியமனம்.
- சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை முகமையின் திட்ட அலுவலராக அலர்மேல்மங்கை நியமனம்.