சீர்காழியில் கடந்த மாதம் ஆசிரியர் வீட்டில் திருட்டில் ஈடுப்பட்ட கொள்ளையர்கள் மூன்று பேரை பிடித்து, அவர்களிடம் இருந்து 13 சவரன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


வெளியூர் சென்று வந்த ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம் வில்வா நகரை சேர்ந்தவர் 57 வயதான ஆசிரியர் திருமாறன். இவர் கடந்த மாதம் 15 -ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோயமுத்தூர் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.  இந்நிலையில் மீண்டும்  நான்கு நாட்கள் கழித்து மே 19ம் தேதி காலை ஊர் திரும்பிய அவர் வீட்டை திறக்க முற்பட்டபோது காம்பவுண்ட் கேட் மற்றும் வீட்டின் முன்புற கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த திருமாறன், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த மரத்தால் ஆன பீரோ மற்றும் இரும்பு பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் கலைந்து, சிதறி கிடந்ததுள்ளது.




சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்க் திருட்டு


மேலும் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள், பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்கள், 7 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பணம் மற்றும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து இதுகுறித்த சீர்காழி காவல் நிலையத்தில் திருமாறன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி காவல்துறையினர், கொள்ளை நடைபெற்ற இடத்தில்  பார்வையிட்டு, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கினர். மேலும் தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Crime: களக்காடு அருகே பேரம் பேசுவது போல் நடித்து யானை தந்தம் பதுக்கல் - 7 பேரை சுற்றிவளைத்த வனத்துறை




விசாரணையில் குதித்த காவல்துறை


அந்த புகாரின் பேரில் சீர்காழி காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்து காவல்ஆய்வாளர் சிவக்குமார், தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டகணேஷ் மற்றும் காவல்துறை குழுவினர் திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரனையில் ஈடுப்பட்டனர். அப்போது கடலூர் ஓ.டி. காவல்நிலைய சரகத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு அடைப்பு காவலில் இருந்துவரும் குறிஞ்சிபாடி சேர்ந்த 22 வயதான ஆனந்தராஜ்,  சிதம்பரம், புளியங்குடியை சேர்ந்த 19 வயதான கலையரசன் மற்றும் கீழபுவனகிரி பகுதியை சேர்ந்த 38 வயதான சுரேஷ் ஆகிய மூன்று பேர் திருட்டில் தொடர்புடையவர்கள் என்பது விசாரனையில் தெரியவந்தது. 


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு எதிரொலி - மயிலாடுதுறையில் அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்




மீட்கப்பட்ட கொள்ளை போன பொருட்கள் 


அதனை அடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று கடலூர் சிறையில் இருந்து மேற்படி நபர்களை எடுத்து விசாரனை செய்தபோது அந்த நபர்கள் திருட்டில் ஈடுப்பட்டது உறுதியானது. பின்னர் அவர்களிடம் இருந்து 13 சவரன் தங்கநகைகள், ஒன்றரை கிலோ வெள்ளிபொருட்கள் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மீண்டும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். திருட்டு நடைபெற்ற ஒரு மாத காலத்தில் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்து கொள்ளை போன பொருட்களை மீட்ட காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலரும் வெகுவாக பாராட்டினர்.