கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை வகித்தார். இதில் விவசாய சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகள், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ் ஏ. சின்னசாமி பேசியதாவது:-


 பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த நாலு மாதமாக கரும்பு விவசாயிகளுக்கு 2.50 கோடி நிலுவை தொகை வழங்கவில்லை. அதனை உடனடியாக வழங்க வேண்டும். ஒரு டன் கரும்புக்கு 3000 வழங்கப்படுகிறது. இது கட்டுப்படியாவதில்லை வெட்டு கூலி, இடுபொருட்கள் விலை ஏற்றம் காரணமாக விவசாயிகள் கரும்பு நடவு செய்வதற்கு தயங்குகின்றனர். 


 கரும்பு விவசாயிகளை ஊக்கப்படுத்த கரும்பு வெட்டும் கூலியை அரசு மானியமாக வழங்க வேண்டும்.  பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 6 லட்சம் டன் கரும்பும் பாப்பிரெட்டிப்பட்டி, கோபாலபுரம், கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 4.50 லட்சம் டன் கரும்பும் அரவை செய்ய கொள்ளளவு கொண்டது. 


 ஆனால் கரும்பு சாகுபடி பரப்பு பாதியாக குறைந்ததால் ஆலையில் அரவை திறன் குறைந்துள்ளது  இவ்வாறு அவர் பேசினார்.



 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்க மாவட்ட செயலாளர் எஸ். சின்னசாமி பேசுகையில்:-


 ஒகேனக்கல் உபரித்திட்டம் நிறைவேற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கால்நடைகள் தீவனங்களின் விலை உயர்ந்துள்ளது இதனால் பால் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டும். கால்நடை தீவனங்களின் விலை உயர்ந்துள்ளது இதனால் பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் ஆத்துக்கொட்டாய், மாமரத்து பள்ளம் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றார். 


தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பிரதாபன் பேசுகையில்:-


 மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக 251 பஞ்சாயத்திலும் 100 நாள் வேலை வழங்கவில்லை. தகுதியுள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகல்பட்டி அருகே பச்சையப்பன் கொட்டாய் முதல் பட்டாக பட்டி வரை விவசாய நிலத்தில் கனிமம் இருப்பதாக ஒன்றிய அரசின் சார்பில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


 விவசாய நிலத்தை இழக்க நாங்கள் தயாராக இல்லை எனவே கனிம ஆய்வை அரசு கைவிட வேண்டும் என்றார்.


 விவசாயிகளின் கேள்விக்கு பதில் அளித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி பேசியதாவது:-  
 
உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கரும்பு நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு வெட்டும் கூலி அரசு பார்வைக்கு கொண்டு செல்லப்படும். 


ஒகேனக்கல் உபநீர் திட்டம் அரசு பார்வையில் உள்ளது. மாவட்டத்தில் 2024 -2025 ஆம் ஆண்டிற்கு 1.72. 280 ஹெக்டர் பரப்பளவில் நெல் சிறுதானியங்கள் பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானியங்கள் பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் பருத்தி, கரும்பு சாகுபடி பரபரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 இதில் தற்போது வரை ஏழு 7. 654 ஹெக்டர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் உற்பத்தியும் வருமானத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வேளாண்மை துறை அலுவலர்கள் விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்
 இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்