சீர்காழி அருகே வருசபத்து கிராமத்தில் மதுபானம் அருந்திய இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


அரசு மதுபானம் அருந்திய இருவர்  


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வருஷபத்து கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ். இவர் வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்க்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19 -ஆம் தேதி  இரவு அரசு மதுபான கடையான டாஸ்மாகில் மதுபானம் வாங்கி கொண்டு அவரது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த அவர் அங்கு இருந்த தனது மைத்துனர் மணிகண்டனுடன் வாங்கி வந்த மதுவை அருந்தியுள்ளார்.  மது அருந்திய பிறகு இருவரும் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் பின் ஒருவராக வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு அவரது வீட்டிலேயே மயங்கி கீழே விழுந்துள்ளனர்.


Mohanlal: தொடரும் நெருக்கடி.. நங்கர் சங்க பொறுப்பை ராஜினாமா செய்யும் மோகன்லால்! காரணம் என்ன?


இருவரில் ஒருவர் உயிரிழப்பு


இதனைப் பார்த்து பதறிப்போன அவரது உறவினர்கள் அவர்கள் இருவரையும் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று கணேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மணிகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் அவர் அருந்திய மதுபானம் பாட்டிலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


TDS Status: பான் கார்ட் உதவியுடன் டிடிஎஸ் நிலையை கண்டறிவது எப்படி? வழிமுறைகள் இதோ..!




கடந்த கால மதுபானம் தொடர்பான சம்பவம்


கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே சீர்காழி பகுதியில் அரசு மதுபான கடையான டாஸ்மாக் கடையில் விற்கப்பட்ட காலாவதியான பீரை வாங்கி குடித்து வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நிலையில், தற்போது அதேபோன்று அரசு மதுபான குடித்த இருவர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மது பிரியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது அரசு மதுபான குடிப்பவர்களும் இதுபோன்று உயிரிழந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Astrology: ஜூன் 3 ஆம் தேதி நேர்கோட்டில் 6 கிரகங்கள்! - 12 ராசிக்காரர்களுக்கும் நடக்கப் போகும் அதிசயம்!