TNPSC: மாணவர்கள் கவனத்திற்கு ..! குரூப் -2, 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


TNPSC Syllabus: குரூப் -2, 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் புதிய பாடத்திட்டம் குறித்து அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் -2, 2ஏ தேர்வுக்கு தனித்தனியே முதன்மை தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.






குறைந்த விலையிலாவது ஒரு ஸ்மார்ட் போன் வாங்குங்க! - பெற்றோர்களை அலெர்ட் செய்யும் பள்ளிக் கல்வித்துறை


குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட தினசரி செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ள குறைந்த விலை ஸ்மார்ட் போன்களையாவது வாங்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோருக்கு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. மாணவர்களின் செயல்பாடுகளைப் பெற்றோருக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் வாட்ஸ் அப் மூதல் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Sasikala: ஜெ.வுக்கு தெய்வ நம்பிக்கை உண்டு; மத நம்பிக்கை இல்லை: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சசிகலா


அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும் ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜெயலலிதாவுக்கு தெய்வ நம்பிக்கை உண்டு எனவும் மத நம்பிக்கை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை குறிப்பிடுவது அவரது அறியாமையையும், தவறான புரிதலையும் வெளிப்படுத்துகிறது. ஜெயலலிதா சாதி, மத, பேதங்களை கடந்து அனைத்து தரப்பினராலும் மதித்து போற்றக்கூடிய மாபெரும் தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர்.


அவர் “மக்களால் நான்..மக்களுக்காகவே நான்” என்று தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலனுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்த சிறந்த மக்கள் தலைவர். அனைத்து சமூகத்தினரும் சொந்தம் கொண்டாடிய ஒரே ஒப்பற்ற தலைவி ஜெயலலிதா தான் என்பது நாடறிந்த உண்மை. சாதி, மத பேதங்களை கடந்து ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட தன்னைத் அவர் அர்ப்பணித்துக் கொண்டார்.” என தெரிவித்துள்ளார்.


Mettur Dam: மீண்டும் சரியும் மேட்டூர் அணையின் நீர்வரத்து - இன்றைய நீர் நிலவரம் இதுதான்!


தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 633 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 1,061 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 784 கன அடியாக குறைந்துள்ளது.


Yercaud Traffic Diversion: ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு...


ஏற்காடு மலர்க்கண்காட்சி 30ஆம் தேதி வரை நீட்டிப்பு. ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் நாளை (26.05.2024) முடிய இருந்த ஏற்காடு மலர்க்கண்காட்சி மட்டும் 30ஆம் தேதி வரை (4 நாட்கள்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளில் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.