சீர்காழி அருகே கோழி கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு லோடு ஆட்டோக்களை திருடி சென்ற இளைஞர்கள் இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் சிசிடிவி கேமரா என்பது அத்தியாவசிய ஒன்றாக இருந்து வருகிறது. சிசிடிவி முக்கியத்துவம் குறித்தும் அதன் பயன்பாடு குறித்து விவரித்து, அதனை கடைகள், குடியிருப்புகள், வீடுகள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் என பல இடங்களிலும் வைப்பதற்கு காவல்துறையினர் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் மக்களே புரிந்து கொண்டு வீடுகளிலும் மற்ற பிற இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவி உள்ளனர். மேலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட பகுதிகளில் நடக்கும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் குறித்து எளிதில் அடையாளம் காண இந்த சிசிடிவி கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. அந்த வகையில் சீர்காழி அருகே காணாமல் போன சரக்கு வாகனங்களை சிசிடிவி காட்சி மூலம் காவல்துறையினர் குற்றவாளிகளை அடையாளம் கண்டு பிடித்துள்ளனர்.
விளையாட்டு மைதானத்தில் குடிக்க சென்ற போலீஸ் - பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞர்கள் ?
சீர்காழி காணாமல் போன இரண்டு சரக்கு வாகனங்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சேந்தங்குடி பகுதியில் கோழிக்கறி மொத்த விற்பனை கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையின் முன்பு இரவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த கடையின் இரண்டு லோடு ஆட்டோக்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுள்ளனர். மறுநாள் காலை வந்து பார்த்த போது இரண்டு வாகனங்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த கடையின் மேலாளர் தென்பாதி திருவள்ளுவர் நகரை சேர்ந்த 29 வயதான கோகிலன் என்பவர் இது குறித்து சீர்காழி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
Chengalpattu: பச்சிளங்குழந்தையை சாலையில் வீசிய கல்நெஞ்சு தாய்! அம்மாவாக மாறி காப்பாற்றிய திருநங்கை!
காவல்துறையினர் விசாரணை
புகாரின் பேரில் சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார், உதவிஆய்வாளர் அசோக்குமார் மற்றும் காவல்துறை கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பூட்டிய கடையின் உள்ளே வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வாகனத்தின் சாவியை எடுத்து சென்று வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு வாகனங்களை திருடி சென்றது தெரியவந்தது. அதன் அடிப்படையில் சீர்காழி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
சிறுமியை கட்டி வைத்து பாலியல் தொந்தரவு- 60 வயது காமக்கொடூரன் கைது
மாட்டிக்கொண்ட திருடர்கள்
அப்போது சட்டநாதபுரம் பகுதியில் வாகன தணிக்கை செய்தபோது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோக்களை நிறுத்தி விசாரித்தனர். அதற்கு வாகனத்தை ஓட்டு வந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவர்களை சீர்காழி காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியை சேர்ந்த 24 வயதான சூர்யா மற்றும் 23 வயதான சத்தியன் என்பதும், சேந்தங்குடி கோழிக்கறி விற்பனை கடையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவை திருடிவந்ததும் தெரியவந்தது. அதனையடுத்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து, சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.