தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.


அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்:


திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய
 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து குணமாக மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது. 


மேற்குறிப்பிட்ட எட்டு மாவட்டங்கள் மாத்திரம் இல்லாமல் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வரும் கிருஷ்ணகிரி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். இதில் டென்- 1 (DENV-1) உட்பட நான்கு வகை காய்ச்சல்கள் உண்டு.


நல்ல தண்ணீரில் ஏடிஸ் ஏஜிப்தி வகையைச் சார்ந்த கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவும். சுமார் 70 நாள்களுக்கு இந்த வைரஸ் உயிர் வாழும் என்பது மட்டும் இல்லாமல் 500 மீட்டர் தூரம் வரை பரவும் தன்மை உடையது என்பதால் இது மக்களை எளிதில் தாக்கக்கூடியது. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்களை எளிதில் நோய்வாய்ப்படவைக்கும். 


டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்



  • கடுமையான வயிற்று வலி,

  • தொடர் வாந்தி,

  • விரைவான சுவாசம்,

  • ஈறுகளில் இரத்தம் கசிதல்,

  • உடற்சோர்வு


டெங்கு காய்ச்சலில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. அதில், 



  • வீடு மற்றும் குடியிறுப்புப் பகுதிகளில் பயனற்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொளவது நல்லது. 

  • குடிநீர் தொட்டிகளை சரியாக மூடி வைத்திருப்பதுடன், தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்.