மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராய விற்பனையும், பாண்டி சாராயம் விற்கப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், அவர்களில் கண்ணில் மண்ணைத் தூவும் விதமாகவும், ஒரு சில காவலர்களின் ஒத்துழைப்பாலும், இந்த கள்ளச்சாராய விற்பனையை தடுப்பது என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது.




மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய பகுதியில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் அமைந்துள்ளதால், அங்கிருந்து பாண்டி எரி சாராயம் கடத்தி வரப்பட்டு, மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. மாவட்ட எல்லையில் சோதனை சாவடிகள் இருந்தும் அதனை கடந்து சாராயம் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவது, மக்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. சாராய விற்பனையை தடுக்க வேண்டும் என்றால் காவல்துறை அனைவருமே தங்கள் பணியை சரியாக செய்தால் மட்டுமே முடியும் எனவும் மாறாக கையூட்டு பெற்றுக் கொண்டு கடத்தல் காரர்களையும் சாராய விற்பனை செய்பவர்களையும் காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை என பலர் குற்றச்சாட்டையும் பதிவு செய்கின்றனர்.




இந்நிலையில் இதற்கு எடுத்துக்காட்டாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கழுக்கானிமுட்டத்தை சேர்ந்த தவமணி அவரது மகள் சுபத்ரா ஆகியோர் வேப்பங்குளம் கருவக்காடு பகுதியில் தொடர்ந்து பல மாதங்களாக சாராய விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தவமணி கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மகள் சுபத்ரா தொடர்ந்து சாரய விற்பனை செய்து வந்துள்ளார். 


Goa Forest Fire: ஆறு நாளாக கோவாவில் பற்றி எரியும் காட்டுத்தீ... தீயை பரப்பியவர்கள் யார்..? உத்தரவிட்ட கோவா அரசு!




இந்த சூழலில் இதுகுறித்து  மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த வேப்பங்குளம் பகுதி பெண்கள் சாராய விற்பனை நடைபெற்ற இடத்திற்கு சென்று பாண்டி சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அப்பகுதியில் உள்ள சாலையில் சாராய பாக்கெட்டுகளை உடைத்து அவற்றை அழித்தனர். தொடர்ந்து, நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


டாஸ்மாக் டெண்டர் விவகாரம்: அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி..!




இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலைமறியல் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு காவல்துறையினர் வராத நிலையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் சுபத்ராவை  எச்சரிக்கை செய்து விட்டு பெண்கள் கலைந்து சென்றனர். மேலும் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், தங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக சாராய விற்பனை நடைபெற்று வருவதாகவும், காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு சாராய விற்பனையை தடுக்க வேண்டும் என்றும், அதனை விடுத்து அவர்களும் இதனை கண்டு கொள்ளாமலும், புகார் அளித்தபின்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல்துறையினர் மீது நம்பிக்கை இழந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.


DGE TN Warning: தேர்வு எழுதவே நிரந்தரத் தடை: ஒழுங்கீனச்‌ செயலில்‌ ஈடுபடுவோருக்கு அரசுத் தேர்வுகள்‌ இயக்ககம் எச்சரிக்கை




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண