சீர்காழி அருகே அனுமதியின்றி சவுடு மண் எடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


சட்டத்திற்கு புறம்பாக மணல் எடுப்பு 


மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலை அடுத்து நத்தம் பகுதியில் அனுமதியின்றி பல மாதங்களாக தொடர்ந்து சவுடு மண் எடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனாவுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த ரகசிய தகவலை அடுத்து நள்ளிரவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா மற்றும் காவல்துறையினர் நத்தம் பகுதிக்கு நேரடியாக ஆய்வுக்கு சென்றுள்ளனர். 


P Chidambaram on Budget: பணவீக்கப் பிரச்சினை; நிச்சயம் தண்டிக்கப்படுவீர்கள்- பாஜக அரசுக்கு ப.சிதம்பரம் எச்சரிக்கை!




சுற்றி வளைத்த காவல்துறையினர் 


அப்போது அங்கு அனுமதியின்றி சவுடு மண் எடுத்துக் கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்த காவல்துறையினர், அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செய்ததில் நத்தம் பகுதியைச் சேர்ந்த அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ப்ரித்தி என்பவரது கணவர் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான இடம் என்பதும், அதில் செந்தில்குமார் அரசு அனுமதி ஏதும் இன்றி சுமார் 20 அடி ஆழத்திற்கு மேல் மண் எடுத்தது தெரியவந்தது.


Paris 2024 Olympics: பாரீஸ் ஒலிம்பிக்.. இந்தியாவிற்கு தங்கம் உறுதி! நம்பிக்கையுடன் காத்திருக்கும் நீரஜ் சோப்ரா




வாகனங்கள் பறிமுதல் 


அதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செந்தில்குமார் மற்றும் ஆலவெளி பகுதியை சேர்ந்த டிராக்டர் ஓட்டுனர் கார்த்திக், கதிராமங்கலம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் அனுமதியின்றி மண் எடுக்க பயன்படுத்திய மூன்று டிராக்டர்கள், ஒரு பொக்லைன் இயந்திரம், 2 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவற்றை வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோயில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Group 1 Answer Key 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1பி, 1சி தேர்வுக்கான விடைக் குறிப்புகள் வெளியீடு; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?