டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 1பி, 1சி ஆகிய தேர்வுகளுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் காணலாம்.


தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மற்றும் டிஇஒ எனப்படும் மாவட்டக் கல்வி அதிகாரி  ஆகியவற்றுக்கான் காலிப் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப் 1 பி, குரூப்1 சி முதல்நிலைத் தேர்வு ஜூலை 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடந்தது. 63 மையங்களில் நடந்த இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 8,433 பேர் எழுதினர். இத்தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.


தேர்வர்கள் https://tnpsc.gov.in/Tentative/Document/05_2024_CCSE_IB_IC_12_07_2024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, விடைக் குறிப்புகளைக் காணலாம்.


குரூப் 1 தேர்வு விடைக் குறிப்புகளும் வெளியீடு


அதேபோல், துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளை நிரப்ப குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 340 பேர் எழுதினர். இந்த நிலையில் குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.


இந்த விடைக் குறிப்புகளைத் தேர்வர்கள், https://tnpsc.gov.in/Tentative/Document/04_2024_CCSE_P_I_13_07_24.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கலாம். 


ஆட்சேபனை தெரிவிக்கலாம்


குரூப் 1 மற்றும் குரூப் 1 பி, 1 சி ஆகிய தேர்வுகளுக்கான உத்தேச விடைகளில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், தேர்வர்கள் அவற்றை ஆட்சேபனை செய்யலாம். உரிய ஆதாரங்களுடன் ஜூலை 30ஆம் தேதிக்குள் ஆன்லைனில் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.


தேர்வர்கள் https://tnpsc.gov.in/english/Answerkeychallenge.aspx?key=b148ed01-c1be-4576-9f79-9c15cc169a76 என்ற இணைப்பை க்ளிக் செய்து குரூப் 1 தேர்வுக்கு ஆட்சேபனை செய்யலாம். 


அதேபோல குரூப் 1 பி, 1 சி தேர்வுக்கு https://tnpsc.gov.in/english/Answerkeychallenge.aspx?key=05f83ec9-700a-4ac4-a3c3-85ccd8606518 என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஆட்சேபிக்கலாம். 


எனினும் தங்களின் விண்ணப்ப எண் Application Number, முன்பதிவு எண் (Register Number), பிறந்த தேதி Date of Birth (DD/MM/YYYY), பாடம் (Subject), கேள்வி எண் (Select the Question No) ஆகியவற்றைச் சரியாக உள்ளிட வேண்டும். 


இவற்றை டிஎன்பிஎஸ்சி முறையாக ஆய்வு செய்து, சரியாக இருக்கும் பட்சத்தில் உத்தேச விடைக் குறிப்பில் திருத்தம் செய்யப்பட்டு, இறுதி விடைக் குறிப்பு வெளியிடப்படும். 


கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/