அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியில் ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடி மருந்து எடுத்து செல்லப்பட்ட லாரியை காவல் துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு வழிச்சாலையில் வாகன சோதனை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோவில்பத்து என்னும் இடத்தில் நான்கு வழிச்சாலையில் சீர்காழி காவல்துறையினர் வாகன தணிக்கில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான லாரி ஒன்றை நிறுத்தி காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் செய்ததில் ஒரு டன் எடை கொண்ட வெடி மருந்து உரிய பாதுகாப்பு மற்றும் ஆவணங்கள் இன்றி மிகவும் ஆபத்தான முறையில் எடுத்து வந்தது தெரியவந்தது.
ஒருகோடி ரூபாய் மதிப்பிலான வெடிமருந்து
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 40 சாக்கு மூட்டைகளில் வெடி மருந்து இருந்துள்ளது. அதனை அடுத்து காவல்துறையினர் பிடிப்பட்ட வெடி மருந்து ஏற்றிவந்த லாரியை தீ விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பாக நான்கு வழிச்சாலையில் ஓரம் உள்ள ஒர் வயலில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பாண்டிச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு எடுத்து செல்வதாக கூறியுள்ளார்.
IND vs NZ 1st Test:5 வீரர்கள் டக் அவுட்;ரோஹித் ஷர்மா செயலால் வந்த வினை! ரசிகர்கள் அதிர்ச்சி
லாரி பறிமுதல் - ஒருவர் கைது
ஆனால், உரிய ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு அற்ற முறையில் எடுத்து சென்றதால் காவல்துறையினர் லாரியில் வெடி மருந்துடன் பறிமுதல் செய்து ஓட்டுனரை கைது செய்துள்ளனர். ஒரு டன் எடை கொண்ட வெடி மருந்து என்பதால் பெரிய அளவில் ஆபத்து உள்ள பொருளை இவ்வளவு எளிதாக அலட்சியமாக எடுத்து சென்று வெடித்து சிதறினால் பெரும் சேதம் ஏற்படும் என்பதை தெரிந்து ஏற்றி வந்த லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ள சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
TN Rain Updates: இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!