மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் (19.10.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

 

மின்சாரம் நிறுத்தப்படும்


மின் பராமரிப்பு பணிதமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அல்லது சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.  அந்தவகையில் தமிழ்நாடு மின் வாரிய மதுரை மேற்கு செயற்பொறியாளர் C.லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.

 


மின்தடை ஏற்படும் பகுதிகள்


சம்பட்டிபுரம் மெயின் ரோடு, ஜெர்மானூஸ் சில பகுதிகள், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், HMS காலனி, டோக்நகர் 4-16 தெரு, தேனி மெயின் ரோடு, விராட்டிபத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உசி மெயின் ரோடு, E.B காலனி, நடராஜ் நகர், அசோக் நகர், டோக்நகர் 1-3 தெரு, கோச்சடை கிராமம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகள், ஜெயில் ரோடு, மேலபொன்னகரம் 8,10,11,12 தெரு, கனரா பாங்க் முதல் டாக்சி ஸ்டாண்ட வரை, ஆர்.வி.நகர், ஞானஒளிபுரம், விசுவாசபுரி 1-5 தெரு, முரட்டம்பத்ரி, கிரம்மர்புரம், மீல் காலனி, ஆரப்பாளையம் பஸ் ஸடாண்டு, ESI மருத்துவமனை, கைலாசபுரம், SS காலனி ஏரியா, வடக்கு வாசல், காலனி சொக்கலிங்கநகர் 1-9 தெரு, பொன்மேனி, சம்பட்டிபுரம், பொன்மேனி மெயின் ரோடு, பாரதியார் மெயின் ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம் பாத்திமாநகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திராநகர்.

 


மதுரை கிழக்கு செயற்பொறியாளர் இரா.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.


 







ஒத்தக்கடை துணை மின்நிலையம் ( 19.10.24)


ஒத்தக்கடை, நரசிங்கம், வௌவால் தோட்டம், விவசாய கல்லூரி, அம்மாப்பட்டி, காளிகாப்பான், ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ்நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி, காதக்கிணறு, கடச்சனேந்தல், புதுப்பட்டி, ஜாங்கிட் நகர், அழகர் கார்டன், சுந்தரராஜன்பட்டி ஆகிய பகுதிகள்.