சீர்காழி அருகே வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காத ஆன்லைன் வர்த்தகரை கடத்திய இருவரை கைது செய்த போலீசார்  பைனான்சியர் உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் என்பவரின் மகன் 37 வயதான கவியரசன். ஆன்லைன் வர்த்தகர் தொழில் செய்து வருகிறார். இவர் தனது நண்பரான தஞ்சாவூர் பிரான்சிஸ் என்பவரது மகன் 38 வயதான ஸ்டீபன் செல்வகுமார் மூலம் தஞ்சாவூரை சேர்ந்த பாலு கண்டியார் என்பவரது மகன் சின்னையா என்கிற பாலகுமாரன் என்பவரிடம் வட்டிக்கு 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். 


Asian Para Games: தங்கப் பதக்கங்களை தட்டித் தூக்கும் இந்திய தங்கங்கள் - ஆசிய பாரா விளையாட்டில் மிரட்டல்




அதனைத் தொடர்ந்து 4 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்த கவியரசன் மீதி தொகையை கொடுக்காமல் இழுக்கடித்தாக சொல்லப்படுகிறது. இதனால் மீதி பணத்தை கவியரசனிடம் இருந்து எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என திட்டம் போட்டு ஸ்டீபன் செல்வகுமார் தொலைபேசி மூலம் கவியரசனை தஞ்சாவூருக்கு அழைத்துள்ளார். தஞ்சாவூருக்கு சென்ற கவியரசனை பைனான்சியர் பாலகுமாரன் உள்ளிட்டோர் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் கவியரசனின் மனைவி அனுசியா தேவிக்கு போன் மூலம் தொடர்ந்து கொண்டு தங்களிடம் வாங்கிய கடனுக்காக கவியரசனை கடத்தி விட்டதாகவும் , கடன் தொகையை கொடுத்துவிட்டு அவரை  மீட்டுச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.


Omni Bus Strike: சமரசம் இல்லை.. பறிமுதல் தொடரும்.. ஆம்னி உரிமையாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமைச்சர்..




இதனால் அதிர்ச்சி அடைந்த அனுசியா தேவி திருவெண்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் திருவெண்காடு காவல்துறையினர் 5  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பைனான்சியர் பாலகுமாரன், அவரது சகோதரர் பாலமுருகன், புதுக்கோட்டை அத்திவெட்டியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரின் 53 வயதான மகன் புகழேந்தி, மணிகண்டன், கவியரசனின் நண்பர் தஞ்சாவூர் ஸ்டீபன் செல்வகுமார் ஆகியோர் தஞ்சாவூர் சென்று கவியரசனை கடத்திச் சென்று புதுக்கோட்டை மாவட்டம் அத்திவெட்டி அய்யனார் கோயில் அருகே  அடைத்து வைத்து, அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது.


Irfan Rashid Dance: பாகிஸ்தானுக்கு ஆப்படித்த ஆப்கானிஸ்தான்.. மைதானத்திலேயே இர்ஃபான் - ரஷீத் கான் உற்சாக நடனம் - வைரல் வீடியோ




அதனை அடுத்து காவல்துறையினர் கவியரசனை மீட்டு அழைத்து வந்து சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய புகழேந்தி மற்றும் ஸ்டீபன் செல்வகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தலைமறைவான பைனான்சியர் சின்னையா என்கிற பாலகுமாரன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோரை தேடி வருகின்றனர். கொடுத்த கடனை திருப்பி செலுத்தாத நபரை கடத்திச்சென்று பணம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Vegetable Price: விஷேச நாளில் எகிறிய எலுமிச்சை, பீன்ஸ் விலை.. மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் இதோ..