“தமிழகத்தில் நீட் தேர்வை ஒழிப்பது சாத்தியமில்லை, விளையாட்டுதுறை அமைச்சர் விளையாட்டாக இருக்கிறார்” - சீமான்

தமிழக மக்கள் யாருமே இலவசம் வேண்டும் என்று இதுவரை கேட்டதில்லை. தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று குறுக்கு எண்ணத்தில் மக்களுக்கு இவர்களை வந்து இலவசங்களை கொடுத்து அடிமை ஆக்குகின்றனர்.

Continues below advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்றத்தை உள்ளடக்கிய கட்சியினருக்கு கலந்துரையாடலில் தமிழகத்தில் நீட் தேர்வை ஒழிப்பது சாத்தியமில்லை விளையாடுதுறை அமைச்சர் விளையாட்டாக இருக்கிறார் சீமான் பேட்டியளித்தார்.

Continues below advertisement

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்றத்தை உள்ளடக்கிய கட்சியினருக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அதற்கு முன்னதாக செய்தியாளுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் நீட் தேர்வை ஒழிப்பது சாத்தியமில்லை. விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டு அமைச்சரா இருக்கிறார். உதயாநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செங்கல்லை காட்டியதைப் போல் நீட் தேர்வுக்கு முட்டையை காட்டுகிறார். அமைச்சர் உதயாநிதி ஸ்டாலின் தமிழக அரசு நாடகமாடி வருகின்றன. நீட் தேர்வை எதிர்த்து கையெழுத்து இயக்கம் தொடங்குகின்றது. இதை யாரிடம் கொடுப்பார்கள் மத்திய அரசிடம் தான் கொடுப்பார்கள். அப்போது அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா?.

 


 

அதேபோல் ஜாதி வாரி கணக்கெடுப்பதற்கு ஏன் தயங்குகின்றன. மத்திய அரசு அனுமதி பெற வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் பீகாரில் நிதிஷ்குமார் மத்திய அரசின் அனுமதி பெற்றா ஜாதிவாரி கணக்கு எடுத்தார். ஜாதி வாரி கணக்கெடுத்தால் தமிழகத்தில் பூர்வகுடி தமிழர்கள் எவ்வளவு இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும். அதற்காகத்தான் தமிழக அரசு ஜாதி வாரி கணக்கை எடுக்க தயங்குகின்றன. அதேபோல் இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி ஊழல் செய்து மக்களை முட்டாள் ஆக்குகின்றனர். அமெரிக்காவில் உள்ளது போல் ஜப்பானில் உள்ளது போல் தேர்தல் முறைகளை இந்தியாவில் மாற்றி அமைக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெறுகின்றன. அதனால் பழைய முறைப்படி வாக்குச்சீட்டு தேர்தல் முறையை கொண்டு வர வேண்டும்,

 

 


தமிழக மக்கள் யாருமே இலவசம் வேண்டும் என்று இதுவரை கேட்டதில்லை. தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று குறுக்கு எண்ணத்தில் மக்களுக்கு இவர்களை வந்து இலவசங்களை கொடுத்து அடிமை ஆக்குகின்றனர். அதேபோல் அறிவை வளர்க்கும் கல்வியும் உயிரைக் காக்கும் மருத்துவமும் முறையாக மக்களுக்கு தரவேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செயல்படுத்துவோம் இலவசமே தேவை இல்லை, 100 நாள் பணியினால் இன்று விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் 100 நாள் பணிகள் தேவையில்லை. நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. நாங்கள் தேர்தலை தனித்து தான் நிற்போம் என்று தொடர்ந்து கூறிக்கொண்டு தான் இருக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

Continues below advertisement