சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது போன்று நடித்து, ஆடு திருட்டில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது சிறையில் அடைந்துள்ளனர்.
காணாமல் போன ஆடு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதி சாய்பாபா கார்டனில் வசித்து வருபவர் பஞ்சநாதன் என்பவரின் மனைவி கங்கதேவி. இவர் வீட்டில் ஆடுகள் வளர்ந்து வருகிறார். அவைகள் அருகில் உள்ள வயல் வெளியிலும், வீடுட்டின் அருகே உள்ள இடங்களிலும் மேய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரம் செய்து கொண்டு இருவர் வந்துள்ளனர். அவர்கள் இருவரும் தெருக்களில் வியாபாரம் செய்வது போல் நடித்து நூதன முறையில் தெருவில் நின்ற ஆட்டை பிடித்து தங்கள் பைக்கில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கும் பகுதியில் வைத்து திருட முயன்றுள்ளனர்.
Mookuthi Amman 2: நயனுக்கு No சொல்லிய ஆர்.ஜே.பாலாஜி - “மூக்குத்தி அம்மன்” ஆக மாறும் திரிஷா!
சிக்கிய ஆடு திருடர்கள்
இதனை பார்த்த ஆட்டின் உரிமையாளர் கங்காதேவி, அக்கம்பத்தினரின் உதவுடன் ஆடு திருட்டில் ஈடுபட்ட இருவரையும் மடக்கி பிடித்து வைத்துக்கொண்டு சீர்காழி காவல்நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி காவல்நிலைய உதவி ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் சீனிவாசன், ஆடு திருடிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், ஆடு திருட்டில் ஈடுப்பட்ட நபர்கள் கடலூர் மாவட்டம் வடலூர் அருகே வேங்கட குப்பம் கிராமத்தை சேர்ந்த காட்டையன் என்பவரின் மகன் 29 வயதான விஜய் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காட்டுநாயக்கன் தெரு சேர்ந்த பாலு என்பவரின் மகன் 26 வயதான சதீஷ் என்பது தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
மேலும் இருவரும் இருசக்கர வாகனத்தில் வைத்து ஆடுகளை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நூதன முறையில் ஆடுகளை திருடிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த சீர்காழி காவல்துறையினர் அவர்களை சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைந்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது போன்று தெருவில் ஆடு திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
NEET 2024 Answer Key: நீட் தேர்வு ஆன்சர் கீ வெளியீடு; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?