தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் மே 24ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் அகில இந்திய அளவிலான பல்வேறு  ஹாக்கி அணிகள், அதாவது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் - அகமதாபாத், சென்ட்ரல் செக்ரிட்டேட் - நியூ டெல்லி, சவுத் சென்ட்ரல் ரயில்வே - செகந்திராபாத், என்.சி.ஓ.இ. (நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்) - போபால் மற்றும் எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் - கோவில்பட்டி உட்பட 16 சிறந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.




ஆறாவது நாள் நடைபெற்ற முதல் போட்டியில்  சென்னை, ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணியும் சென்னை, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணியும் மோதின. இதில் 4:1 என்ற கோல் கணக்கில் சென்னை, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணி வெற்றிப் பெற்றது. 2வது போட்டியில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் கர்நாடகா, ஹாக்கி பெல்லாரி அணியும் மோதின. இதில் 7:0 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி அபார வெற்றிப் பெற்றது. 3வது போட்டியில் நியூ டெல்லி, சென்ட்ரல்  செக்ரடேரியேட் அணியும் பெங்களூரு, கனரா பேங்க் அணியும் மோதின. இதில் 4:3 என்ற கோல் கணக்கில் பெங்களூரு, கனரா பேங்க் அணி வெற்றிப் பெற்றது. 4வது போட்டியில் சென்னை, இன்டக்ரல் கோச் பேக்டரி அணியும் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியும் மோதின. இதில் 3:2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி வெற்றிப் பெற்றது.




 


லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி, போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் சென்னை, இந்தியன் பேங்க் அணி, புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணி, சென்னை, இன்கம் டேக்ஸ் அணி நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி,  பெங்களூரு, கனரா பேங்க் அணி,  சென்னை, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணி ஆகியவை கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.





ஏழாம் நாளான இன்று நடைபெற்ற முதல் காலிறுதி போட்டியில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும் சென்னை, இந்தியன் பேங்க் அணியும் மோதின. இதில் 4:1 என்ற கோல் கணக்கில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வெற்றிப் பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.




இன்று நடைபெறும்  இரண்டாவது காலிறுதி போட்டியில் புபனேஸ்வர்  நிஸ்வாஸ் அணியும் சென்னை, இன்கம் டேக்ஸ் அணியும் மோதுகின்றன. மூன்றாவது காலிறுதி போட்டியில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியும் மோதுகின்றன. நான்காவது காலிறுதி போட்டியில் பெங்களூரு, கனரா பேங்க் அணியும் சென்னை, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணியும் மோதுகின்றன.