லிப்ட் கேட்டு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி 


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சேந்தங்குடி வடபாதி தெருவை சேர்ந்தவர் பூராசாமி என்பவரின் 46 வயதான மகன் ஜெகநாதன். இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் சிட்பன்ட் ஒன்றில் வசூல் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஆனந்ததாண்டவபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வசூலுக்காக சென்றுள்ளார். வாகனம் பஞ்சர் ஆனதால் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் லிப்ட் கேட்டு அவருடன் மயிலாடுதுறை நோக்கி சென்றுள்ளார்.


BrahMos Deal: இந்திய பாதுகாப்பு ஓப்பந்தத்தில் புதிய மைல்கல்.. பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கிய பிலிப்பைன்ஸ்!




வழிமறித்த கொள்ளையர்கள்


அப்போது கழுக்கானிமுட்டம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் இருசக்கரவாகனத்தை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து லிப்ட் கொடுத்த இருசக்கர வாகன ஓட்டுநர், மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் சேர்ந்து ஜெகநாதனை அடித்து தாக்கியதோடு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு ஜெகநாதனை விரட்டி அடித்துள்ளனர். தொடர்ந்து கழுக்கானிமுட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலரின் உதவியுடன் வழிபறி செய்தவர்களை மடக்கி பிடித்தபோது இருவர் தப்பி ஓடினர். 


Tata Motors: தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்




மடக்கி பிடித்த பொதுமக்கள் 


லிப்ட் கொடுத்த நபரை பிடித்து அடித்து மரத்தில் கட்டி வைத்து மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் வழிபறியில் ஈடுபட்ட நபரை மீட்டு விசாரணை செய்ததில் மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர் கழனிவாசல் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி என்பவரின் 18 வயதான மகன் வரதராஜன் என்பதும், மயிலாடுதுறை கழுக்காணிமுட்டம் ஈவேரா தெருவை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் 18 வயதான மகன் சுபாஷ் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 3 பேர் சேர்ந்து தனியார் சிட்பண்ட் ஊழியரை தாக்கி விட்டு செல்போன் பணத்தை திட்டமிட்டு பறித்து சென்றதும், ஒருவர் எதிர்பாராத விதமாக சிக்கியதும் தெரிய வந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை காவல்துறையினர் வரதராஜன், சுபாஷ் மற்றும் சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரதராஜன், சுபாஷ் ஆகிய 2 பேரையும் மயிலாடுதுறை கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். மேலும், சிறுவனை தஞ்சை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கொண்டு சேர்த்தனர்.


Mohan G -Pa.Ranjith: ரஜினி வாய்ப்பு தரலைனா நீங்க ஒன்னுமே இல்லை.. பா.ரஞ்சித்தை சரமாரியாக விமர்சித்த மோகன்.ஜி!