டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்து,உலகின் தலைசிறந்த சொகுசு கார்களாக பார்க்கப்படும் ஜாகுவார், லேண்ட் ரோவர் உள்ளிட்ட கார்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யவுள்ளது.
டாடா மோட்டார்ஸ்:
ராணிப்பேட்டையில், புதிதாக அமையவுள்ள டாட்டா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதுகுறித்தான தகவலை, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமானது தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சொகுசு கார்களை, அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. டாடா மோட்டாரஸ் நிறுவனத்தின் முதலீட்டால் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என கூறப்படுகிறது.
இதனால், ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரிட்டன் , சீனா, பிரேசில், ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் ஜே.எல்.ஆர் கார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. தற்போது, இந்தியாவில் விற்பனையாகும் ஜே.எல்.ஆர் கார்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டில் உற்பத்தி:
இந்நிலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழ்நாட்டில் தயாராகிறது ஜே.எல்.ஆர் கார். இந்த சொகுசு கார்கள் உற்பத்தி மையமானது ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமையவுள்ளது. இதையடுத்து, அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர் போல ராணிப்பேட்டையைச் சுற்றி ஏராளமான வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் அமையும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
இதையடுத்து,படிப்படியாக உற்பத்தியை அதிகரிக்கவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர் , டிஃபெண்டர் போன்ற உயர்ரக சொகுசு கார்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த முதலீட்டால் நேரடி மற்றும் மறைமுகமாக லட்சகணக்கான வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனால், பொறியியல் மாணவர்களுக்கு வேலவாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: Vintage Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையை புரட்டிப்போட்ட அந்த 7 கார்கள் - லிஸ்ட் உள்ளே..!
Car loan Information:
Calculate Car Loan EMI