சீர்காழி அருகே பயன்படுத்தாத வீட்டின் பழைய கழிவறை தொட்டியில் பெண் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.


விழுப்புரம் - நாகை நான்கு வழி சாலை விரிவாக்கம் 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பாகசாலை காவல் எல்லைக்குட்பட்ட செம்பதனிருப்பு கிராமம் உள்ளது. இங்கு விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்க கேசவன் என்பவரது வீடு கடந்த சில ஆண்களுக்கு முன்பு இடிக்கப்பட்டு, அதன் அருகிலேயே புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. ஆனால், பழைய வீட்டின் கழிவறை தொட்டி அகற்றப்படவில்லை புதியதாக கட்டப்பட்டு வரும் வீடு பழைய கழிவறை தொட்டிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.


DMK Meeting : அடுத்த பிரதமர் யார்? ஜுன் 1ம் தேதி திமுக ஆலோசனைக் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு




கழிவறை தொட்டியில் கிடந்த மனித எலும்புகள் 


இந்நிலையில் கேசவன் வீட்டின் அருகே சிறுவர்கள் நேற்று மாலை கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அப்போது கிரிக்கெட் பந்து கேசவன் வீட்டு வளாகத்தில் விழுந்து உள்ளது. அப்போது கழிவறை தொட்டியில் மேல் மூடி திறந்திட்டு கிடந்த நிலையில் பந்தை எடுக்க சென்ற சிறுவர்கள் தொட்டியின் உள்ளே பார்த்தபோது மனித எலும்புக்கூடுகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து சிறுவர் தங்கள் பெற்றோரிடம் அதனை தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து உடனடியாக அவர்கள் வீட்டின் உரிமையாளர் மற்றும் பாகசாலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். 


T20 World Cup 2024: நியூயார்க்கில் ஜாலியாக உலா வரும் சூர்யகுமார், ஜடேஜா.. டி20 உலகக் கோப்பைக்காக கிளம்பிய சஞ்சு, ஜெய்ஸ்வால்!




காவல்துறையினர் விசாரணை 


தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரனையில் கழிவுநீர் தொட்டியில் கிடப்பது மனித பெண் எலும்புக்கூடு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தடவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு பிறகு தவறி தொட்டியில் விழுந்து உயிரிழந்தார்? அல்லது யாரேனும் கொலை செய்தார்களா என இறப்பிற்கான காரணம் என்ன என்பது தெரிய வரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீட்டின் கழிவறை தொட்டியில் மனித எழும்புக்கூட கிடந்த சம்பவம் அப்பகுதி மற்றும் இன்றி மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tata Altroz Racer: ஆல்ட்ரோஸ் ரேசர் காரை டீஸ் செய்த டாடா - டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் அட்டகாசமான அம்சங்கள்