திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் அதிரடி சோதனை  மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சம் வரை பறிமுதல் 4 மணி நேரத்திற்கு மேலாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Vairamuthu: நான் சர்ச்சைகளுக்கு பிறந்தவன் அல்ல.. செய்தியாளர்கள் சந்திப்பில் கடுப்பான வைரமுத்து!


ஆடிட்டிங்:


திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த 14 ஊராட்சி ஒன்றியங்களில் கட்டுப்பாட்டில் 306 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் வருடாந்திர கணக்கு  ஆய்வு செய்யும்  தணிக்கை குழு கடந்த இரு தினங்களாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குநர்  அலுவலகத்தில் வருடாந்திர வரவு செலவுகளை ஆய்வு செய்து வருகிறது.


Fact Check: ஐடன் மார்க்ரமுக்கு முத்தம் கொடுத்தாரா காவ்யா மாறன்? புகைப்படம் உண்மையா?


இந்த  தணிக்கை குழுவில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.


Bank Holidays in June 2024: ஜுன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை - பிளான் பண்ணிட்டு பேங்குக்கு போங்க


லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை:


இந்த புகாரை  தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜன்  தலைமையில் 20 பேர் கொண்ட குழு  அதிரடியாக  நேற்று மாலை  தணிக்கை குழு அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும்  ஊழியர்களிடம் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அவர்களிடம்  இருந்த பணத்தை  பறிமுதல் செய்து அதற்கான  விவரங்களை சேகரித்து வருகின்றனர்.




இதில் சில அலுவலர்களிடம் கணக்கில் வராத பணம் கூடுதலாக இருந்தது இதனைத் தொடர்ந்து அவர்களை தனியாக விசாரித்து வருகின்றனர். சுமார் இரண்டு லட்சத்திற்கு மேல் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது இது குறித்து அதிகாரி அலுவலர் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.