மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் பூட்டி இருந்த வீட்டின் முன்பக்க கதவை உடைத்து 25 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு குற்றவாளிகளே கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றன. இருந்த போதிலும் திருட்டை தடுப்பது என்பது இயலாத காரியமாக இருந்த வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவம் தொடர்கதை ஆகி வருகிறது.
மயிலாடுதுறை சென்ற குடும்பம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அரும்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் 23 வயதான கார்த்திகேயன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் மயிலாடுதுறையில் கட்டிய வீட்டு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சிக்காக கடந்த 5 -ஆம் தேதி குடும்பத்தினருடன் மயிலாடுதுறைக்கு சென்றுள்ளார். தொடரும் கார்த்திகேயன் மட்டும் தினந்தோறும் அரும்பாக்கம் வீட்டிற்கு மதியம் வந்து மீண்டும் மயிலாடுவதற்கு சென்று வந்துள்ளார்.
25 சவரன் தங்க நகைகள் கொள்ளை
இந்நிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கார்த்திகேயன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது ரூமில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்து 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அதனை அடுத்து இச்சம்பவம் குறித்து உடனடியாக பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கார்த்திகேயனின் அளித்த பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரம்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sanjeev Goenka on Dhoni : ”தோனி ஒரு சிறந்த தலைவர்!” திடீரென புகழ்ந்து தள்ளிய சஞ்சீவ் கோயங்கா...
காவல்துறையினர் ரோந்து மேற்கொள்ள கோரிக்கை
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அரும்பாக்கம் கிராமத்தில் 25 சவரன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காவல்துறையினர் முறையாக ரோந்து பணியினை மேற்கொண்டு இது போன்ற கொள்ளை சம்பவங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என அப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.