இந்திய ரசிகர்கள் அனைவரும் விரும்பும் கிரிக்கெட் வீரர்களில் மகேந்திர சிங் தோனியும் ஒருவர். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்று நான்கு ஆண்டுகள் ஆகியும், ரசிகர்கள் இடையே அவருக்கு இருக்கும் மவுசு இன்னும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவார் என ரசிகர்கள் ஆயிரம் கண்களுடன் காத்திருக்கின்றனர்.


ஐபிஎல் 2025: 


தற்போது மீண்டும் ஒருமுறை தனது ரசிகர்களை மகிழ்விக்க தயாராகிவிட்டார் மிஸ்டர் கூல். தோனி ஐபிஎல்-2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக UNCapped வீரராக விளையாடவுள்ளார் தோனி. 


இதையும் படிங்க: Yuvraj Singh : ரியல் உலகக்கோப்பை ஹீரோ.. சிக்சர் கிங் யுவராஜ் சிங்கின் பிறந்தநாள் இன்று!


புகழாரம் சூட்டிய கோயங்கா:


இந்நிலையில், லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தோனிக்கு பாராட்டு மழை பொழிந்தார். தோனி ஒரு அற்புதமான கேப்டன் என்றும் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் என்றும் கோயங்கா கூறினார்.


"இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனியின் பெயர் நிலைத்து நிற்கும். தோனி போன்ற தலைவரை நான் பார்த்ததில்லை.அவரது சிந்தனை முறை, முதிர்ச்சி கூறித்து சொல்ல்வே வேண்டாம், இவ்வளவு இளம் வயதில் எம்.எஸ் தன்னை வடிவமைத்துக்கொண்ட விதம் உண்மையிலேயே அற்புதமானது.


தோனி தனது அனுபவத்தைக் கொண்டு பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளார். உதாரணமாக மதிஷா பத்திரனாவை எடுத்துக் கொள்ளுங்கள். எங்கோ இலங்கையில் இருந்து அவரை கூப்பிட்டு வந்து பதிரானவை எப்படி ஒரு மேட்ச் வின்னராக தோனி மாற்றியுள்ளார்.  தனது வீரர்களை எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தோனிக்கு தெரியும்


பேரனுக்கு கிரிக்கெட் கற்றுக்கொடுத்தவர்:


தோனியை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டேன். லக்னோவுக்கும் சென்னைக்கும் இடையிலான போட்டியின்போது தோனியை ஒருமுறை சந்தித்தேன். என்னுடைய 11 வயது பேரனும் என்னுடன் இருந்தான் அவனுக்கு கிரிக்கெட் பைத்தியம். தோனிதான் எனது பேரனுக்கு கிரிக்கெட் விளையாடக் கற்றுக் கொடுத்தவர்.


இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் தோனியிடம் தொடர்ந்து சில கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். தோனி சலிப்படையாமல் பதில் அளித்து வந்தார். கடைசியாக தோனியிடம் சென்று அவரிடம் அவரை கிளம்ப சொன்னேன். ஆனால் தனது பேரனுடனான உரையாடலை ரசிப்பதாக தோனி கூறியுள்ளார்.


அதனால் தான் அவர் தோனி:


சுமார் அரை மணி நேரம் அவருடன் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார் ஒரு குழந்தைக்காக இவ்வளவு நேரம் செலவிட்ட தோனி உண்மையிலேயே பெரியவர். மற்றவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதை அவருடைய குணம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. அதனால் தான் அவர் தோனி ஆனார். லக்னோவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடும் போதெல்லாம், ஸ்டேடியம் முழுவதும் மஞ்சள் நிற ஜெர்சியால் நிரம்பியிருக்கும்," என அவர் அளித்த பேட்டியில் கோயங்கா கூறினார்.