மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பண்டாரவாடை கலைஞர் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம் என்பவரின் மகன் 40 வயதான கலைவாணன். இவர்மீது 4 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடியான இவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் அவரது வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. 




நாட்டுவெடிகுண்டு வெடித்ததில் கலைவாணனின் இரண்டு கைகளிலும் உள்ள 10 விரல்களும் துண்டானது. மேலும், மார்பு, தொடைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கலைவாணன் மேல் சிகிச்சைக்காக தற்போது தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து வெடிகுண்டு வெடித்த வீட்டை காவல்துறையினர் சீல் வைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் காவல் துறையினர் நடத்திய சோதனையில் வெடிக்காத 2 வெடிகுண்டுகள் மற்றும் குண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள், வெடி மருந்துகள் ஆகியவை வீட்டின் உட்புறம் மற்றும் கொல்லைப்புறத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது.


Karnataka Election 2023: கர்நாடகாவும் காங்கிரஸும்...! பாஜகவுக்கு சொல்லும் பாடம் இதுதான்... மோடி இழந்த வியூகம் என்ன?




கைப்பற்றப்பட்ட 2 வெடிகுண்டுகளை தண்ணீரில் போட்டு வைத்து பின்னர் திருச்சியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நாட்டு வெடிகுண்டை செயலிழக்க செய்தனர். இது தொடர்பாக பெரம்பூர் காவல்  துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தஞ்சை தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் காயத்ரி தலைமையில் தடய அறிவியல் துறை நிபுணர்கள் வெடி மருந்துகளின் மாதிரிகளை சேகரித்து அதனை மேல் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வெடிகுண்டு தயாரிக்கப்பட்ட மூலப் பொருட்களுடன் ஆட்களை கொல்லும் வகையில் உள்ளே பால்ரஸ் குண்டுகள், இரும்பு ஆணிகள் ஆகியவை வைப்பதற்கான மூலப் பொருட்களும் இருந்தது கண்டறியப்பட்டது.


IPL 2023 GT vs SRH: குஜராத்தை வீழ்த்துவது ரொம்பவே கஷ்டம் தான்; ஹைதராபாத் இதுவரை செய்தது என்ன?




தமிழ்நாட்டில் ஏதேனும் குற்றச்சம்பவம் நிகழ மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டார். ஆட்களை கொல்லும் வகையில் தயாரிக்கப்பட்ட வெடி குண்டுகள் கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் கைப்பற்றப்பட்டு இருப்பதும் தயாரித்தவர் படுகாயம் அடைந்ததும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் இடையே பரபரப்பு மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Karnataka Election 2023: கர்நாடகாவில் கொடியேற்றிய காங்கிரஸ்; பாஜக சறுக்கிய இடம் இதுதான்.. ஓர் அலசல்..!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண