IPL 2023 GT vs SRH: ஐபிஎல் தொடரில் இன்று (மே, 15) மோதவுள்ள குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முந்தைய போட்டிகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். 


16வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி கோலாகலமாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. தற்போது லீக் போட்டிகளின் இறுதி கட்டத்தினை எட்டியுள்ள இந்த தொடரில் இதுவரை ஒரு அணி கூட அதிகாரப்பூர்வமாக ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன்ன் உள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்னும் தகுதி பெறவில்லை 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ள ஹைதராபாத் அணியும் ப்ளேஆஃப்க்கான தகுதி பெறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கிறது. 


இந்நிலையில் இன்று (மே, 15) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டில் குஜராத் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் ப்ளேஆஃப்க்கு தகுதி பெறும் முதல் அணியாக இருக்கும். அதேபோல், ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் 10 புள்ளிகளைப் பெற்று தனது ப்ளேஆஃப் வாய்ப்பில் நீடிக்கும். இந்நிலையில் இரு அணிகள் இதுவரை மோதியுள்ள ஆட்டங்களின் முடிவுகள் குறித்து இங்கு காணலாம். 


குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்


ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை மட்டுமே மோதியுள்ளன. இதில் ஒரு போட்டியில் குஜராத் அணியும் ஒரு போட்டியில் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளன.  கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இரு அணிகளும் இரண்டு முறை மோதிக் கொண்டன. முதல் போட்டியில்  ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது.  20 ஓவர்களில் குஜராத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் ஆடிய ஹைதராபாத் அணி 19.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்காக வில்லியம்சன் அரைசதம் விளாசிட்யிருந்தார். 


அதேபோல் இரண்டாவது போட்டியில் மோதிக்கொண்ட போது, டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய ஹைடராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 195 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை என இருந்த போது களத்தில் இருந்த ரஷித் கான் மற்றும் திவாட்டியா இணைந்து 4  சிக்ஸர்கள் பறக்கவிட்டு குஜராத் அணி வெற்றி பெற்றது. 


இந்நிலையில் இன்று இரு அணிகளும் மோதிக்கொள்கின்றன.