மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் வடக்கு தெருவை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன் 27 வயதான தினேஷ் என்கிற ரெட் தினேஷ். இவர் மீது பல்வேறு  குற்ற வழக்குகள் உள்ள நிலையில் கடந்த 25 ஆம் தேதி கோவில்பத்து பகுதியில் காரில் தனது நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் தினேஷை அரிவாளால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். 




இதில் படுகாயம் அடைந்த தினேஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே சரிந்து விழுந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தினேஷ் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிழந்தார். இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Selvaraghavan: மீண்டும் விவாகரத்தா? - ட்வீட் போட்ட செல்வராகவன்.. கடுமையாக விமர்சித்த இணையவாசிகள்..!




இந்நிலையில் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்த சீர்காழி காவல்துறையினர், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவின் பேரில், சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் 4 ஆய்வாளர்கள் கொண்டு தனிப்படைகள் அமைத்து ரெட் தினேஷை கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். அதனை தொடர்ந்து கோவில்பத்து, நீடுர் கிராமத்தில் வைத்து கொலை தொடர்பாக 5 பேரை கைது செய்தனர். கோவில்பத்து கீழ அகனியை சேர்ந்த 27 வயதான அரவிந்தன், மணல்மேடு மேல மருதாந்தநல்லூர் சேர்ந்த 39 வயதான சார்லஸ் (எ) சரண்ராஜ்,  மயிலாடுதுறை கழுகாணிமுட்டத்தை சேர்ந்த 39 வயதான சிலம்பரசன் மயிலாடுதுறை கூரைநாடு பகுதியைச் சேர்ந்த 25 வயதான மணிகண்டன், மயிலாடுதுறை சின்னமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 20 வயதான முகேஷ் ஆகிய ஐந்து பேரையும் தனிப்படை காவலர்கள் கைது செய்து சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


AYUSH Counselling: ஆயுஷ் மருத்துவக் கலந்தாய்வு; முதல் நாளில் 179 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை




தொடர்ந்து நீதிபதி ரெங்கேஸ்வரி ஐந்து பேருக்கும் 15 நாள் நாகை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து 5 பேரையும் சிறையில் அடைத்தனர். இதனிடையே மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த பாரதி, கீர்த்திகரன் ஆகிய இருவரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், தலைமறைவான முத்துப்பாண்டி என்பவரை  காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். காவல் துறையினர் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் இக்கொலை சம்பவம் முன்விரோதம் காரமாக நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


Covid19: துபாயில் இருந்து தமிழ்நாடு வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!