கரூர் பசுபதீஸ்வரர், ஐயப்பா ஆலயத்தில் உலக நன்மைய வேண்டி குத்து விளக்கு பூஜை 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.


 




கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஐயப்பா ஆலயத்தில் பசுபதிசுவரர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 36-ஆம் ஆண்டு விழாவையொட்டி ஆலயத்தில் கொடியேற்றம் தொடங்கி கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து,கரூர் அமராவதி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு ஐயப்பா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


இதனை தொடர்ந்து ஸ்ரீ நவசக்தி யாகம்,ஸ்ரீ சத்திய நாராயணா பூஜை, ஏகதின லட்சார்ச்சனை விழா என்ன சிறப்பு வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வந்த நிலையில், இன்று உலக நன்மை வேண்டி 500க்கும் மேற்பட்ட பெண்கள் குத்து விளக்கு பூஜை நடத்தி வழிபட்டனர். இதில் இந்த ஆண்டு உலக அமைதி விரும்ப வேண்டி, கொரோனாவில் இருந்து பொதுமக்கள் விடுபட, நாடு வளமுடன் இருக்க என சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.




இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் கடைசி தினமான 31-ம் நாள் சீதா கல்யாண உற்சவம், ஐயப்பன் உற்சவம் என சிறப்பு வைபவம் நடைபெற்ற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத ஸ்வாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு ஐந்தாம் நாள் பகல் பத்து திருவீதி உலா.



மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள் வாழ்த்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதிசையை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி திருவீதி விழா நடைபெற்று வருகிறது.





இந்நிலையில் இன்று அபய பிரதான ரங்கநாத சுவாமி உற்சவருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து வண்ண மாலையில் அணிவித்த பிறகு ஆலய மண்டபத்திலிருந்து புறப்பட்ட அபய பிரதான ரங்கநாத ஸ்வாமி ஆலயம் உள்பிரகாரம் வழியாக திருவீதி உலா காட்சியளித்தார்.
மேல தாளங்கள் முழங்க நடைபெற்ற சுவாமியின் பகல் பத்து ஐந்தாம் நாள் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.


அதைத் தொடர்ந்து மீண்டும் ஆலயம் மண்டபம் வந்தடைந்த சுவாமிக்கு ஆலயத்தின் பட்டாச்சாரியார் மகா தீபாரதனை காட்டினார் அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


 


குளித்தலை ஐயப்பன் கோயிலில் குபேர பூஜை ஹோமம்.


கரூர் மாவட்டம் குளித்தலை பெரியாண்டவர் தெருவில் பிரசித்தி பெற்ற சுவாமி ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிவித்து விரதம் இருந்து ஒவ்வொரு நாளும் கோவில் முன்பு ஐயப்பன் பக்தி பாடல்கள் பாடி பஜனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், கடந்த நவம்பர் 17ஆம் தேதி மண்டல பூஜை முன்னிட்டு கால்கோள் விழா நடைபெற்றது. தொடர்ந்து, தினந்தோறும் சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து  அதனைத் தொடர்ந்து லட்சுமி குபேர ஹோமம், தனா கஷ்டனா ஹோமம், மதியம் மகாதீப ஆராதனை, நடைபெற்றது. சுவாமி ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதி வழியாக வீதி உலா நடைபெற்றது. தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. பக்தி பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் செய்தனர்.