துணை என்பது கானல் நீர் என இயக்குநர் செல்வராகவன் போட்ட ட்வீட் சமூக வலைத்தளத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழும் செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் நானே வருவேன் படம் வெளியாகியிருந்தது. இதனிடையே நடிப்பிலும் தனி முத்திரையை பதித்து வரும் அவர் நடிப்பில் இந்தாண்டு பீஸ்ட், சாணிக்காகிதம் ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. நானே வருவேன் படத்தில் சில காட்சிகளில் நடித்த செல்வராகவன், அடுத்தாக பகாசூரன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இதனிடையே அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பல வாழ்க்கை அனுபவங்களை செல்வராகவன் வெளியிடுவார். ஏன் அவர் வெளியிடுகிறார். செல்வாவுக்கு ஏதேனும் பிரச்சனையா என கேட்கும் அளவுக்கு வாழ்க்கையை வெறுக்கும் ஒருவர் பேசும் கருத்துகள் எல்லாம் ட்வீட்டில் வெளிப்படும். எத்தனையோ நாள் நாம் நிம்மதியாய் இருந்திருக்கிறோம். கடவுளின் அருள். ஆனால் அதை பெரிதாய் பொருட்படுத்துவதில்லை. என்றோ ஒரு நாள் பிரச்சனை என்றால் “ ஐயோ அம்மா கடவுளே காப்பாத்து“ தான் என கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து டிசம்பர் 14 ஆம் தேதி, இங்கு தடுக்கி விழுந்தால் நம்மை யாரும் தூக்கிவிட மாட்டார்கள். நாம்தான் அழுது புரண்டு ,நமக்கு நாமே ஆறுதல் அடைந்து, எதையாவது பிடித்துக்கொண்டு, நொண்டி நிமிர்ந்து நிற்க வேண்டும். யாரையாவது எதிர்பார்த்து விழுந்து கிடந்தால் வாழ்க்கை முழுக்க விழுந்து கிடக்க வேண்டியதுதான் என தெரித்திருந்தார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.
இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் , தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும் என தெரிவித்திருந்தார். இதனைக் கண்ட இணையவாசிகள் மீண்டும் செல்வராகவன் விவாகரத்திற்கு தயாராகி விட்டாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்ட செல்வராகவன், அவரை 2010-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். தொடர்ந்து தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்துணை என்பது கானல் நீர் என இயக்குநர் செல்வராகவன் போட்ட ட்வீட் சமூக வலைத்தளத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் செல்வராகவன் ட்வீட்டை விமர்சித்து இணையத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. அவற்றில் சிலவற்றை காணலாம்.