ராஜஸ்தானின் பில்வாராவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால், 48 மணி நேரம் இணைய தள சேவை முடக்கப்பட்டது. 


தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினர்.


பில்வாரா நகரில் முஸ்லீம் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, அவரது சகோதரர் அதே தாக்குதலில் காயமடைந்ததையடுத்து, 48 மணி நேரம் இணையதள சேவை நிறுத்தப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த ஆதர்ஷ் தபாடியா கொலைக்கு பழிவாங்குவதற்காக பைக்கில் வந்த நான்கு ஆசாமிகள் சகோதரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 


பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டம் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் கூடுதல் போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது என்று கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஹவா சிங் குமாரியா தெரிவித்தார். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினர்.


காயமடைந்த அவரது சகோதரர் சிகிச்சைக்காக உதய்பூருக்கு பரிந்துரைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். மாவட்ட எஸ்பி மற்றும் அவரது குழுவினர் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருவதாக ஹவா சிங் கூறினார். அஜ்மீர் பகுதியின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பில்வாராவுக்கு வருகை தந்து நகரத்தின் நிலைமை முற்றிலும் கட்டுக்குள் உள்ளது, என்றார். 


மகாத்மா காந்தி கிராசிங், பத்லா சௌராஹா, பீம்கஞ்ச், சி.டி.கோட்வாலி உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.


இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெய்ஸ்தா மைத்ரேயி கூறுகையில், பிற்பகலில் இரண்டு பைக்குகளில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் பட்லா சந்திப்பில் இப்ராகிம் பதான் (அ) புரா (34), கமாருதீன் (அ) டோனி (22) ஆகியோரை சுற்றி வளைத்து 3 ரவுண்டுகள் சுட்டனர்.


சிகிச்சை பலனின்றி இப்ராகிம் உயிரிழந்தார். ஆதர்ஷ் தபாடியா கொலைக்கு பழிவாங்கவே இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம், இரு குழுக்களிடையே பழைய போட்டியால் எழுந்த சண்டையின் போது, ​​ தபாடியா கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். 


அவரது கொலைக்குப் பிறகு, பில்வாரா பகுதி வகுப்புவாத வன்முறையின் அச்சத்தால் சூழ்ந்துள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக மூன்று சிறார்களையும், மேலும் ஆறு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பெண்கள் வரலாம்.. விலக்கிக்கொள்ளப்பட்ட மசூதியின் நிலைப்பாடு.. என்ன நடந்தது?


Divorce : மனைவிக்கு எச்ஐவி: பொய் சொன்ன கணவரிடம் அதிரடி காட்டிய நீதிமன்றம்