இந்தியாவில் சமீபகாலமாக லிவ் இன் பார்ட்னர் முறை வாழ்வு முறை இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் காணப்படுகிறது, குறிப்பாக, சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி என நாட்டின் பெரு நகரங்களில் அதிகளவில் வசித்து வருகின்றனர். அதேசமயம், லிவ் இன் பார்ட்னர் மத்தியில் நடக்கும் சண்டைகள் கொலைகளில் முடிவதும் அதிகரித்து வருகிறது.


லிவ் இன் பார்ட்னர்:


கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் தேவா. இளம்பெண்ணான தேவாவுடன் படித்தவர் வைஷ்ணவ். வைஷ்ணவ் கொல்லத்தைச் சேர்ந்தவர். கல்லூரியில் ஒன்றாக படிக்கும்போது இவர்கள் இவரும் காதலித்துள்ளனர். பின்னர், பெங்களூரில் வேலை கிடைக்கவே இருவரும் ஒன்றாகவே சென்றுவிட்டனர்.


பெங்களூரில் உள்ள ஒரு பகுதியில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்து இருவரும் ஒன்றாக தங்கி வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் லிவ் இன் பார்ட்னர்களாக இருந்த நிலையில், இவர்களுக்குள் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வரும் என்று கூறப்படுகிறது.


காதலன் கைது:


இந்த நிலையில், திடீரென நேற்று இவர்களது குடியிருப்பில் எந்த சத்தமும், ஆள் நடமாட்டமும் இல்லாமல் இருப்பதை அறிந்த குடியிருப்புவாசிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், காவல்துறையினர் விரைந்து வந்து பார்த்தபோது உள்ளே தேவா சடலமாக கிடந்துள்ளார்.


போலீசார் வைஷ்ணவ் குறித்து விசாரித்தபோது அவர் தலைமறைவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கண்டுபிடித்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தேவாவை வைஷ்ணவ் குக்கரால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.


குக்கரால் அடித்துக்கொலை:


இதுதொடர்பாக, காவல் உயர் அதிகாரி சி.கே.பாபா கூறும்போது, வைஷ்ணவிற்கு  தேவா மீது சந்தேகம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை( நேற்று) குக்கரால் அந்த பெண்ணை தாக்கியுள்ளார். அதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.” இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் படிக்க: Crime: அல்வாவில் விஷம்.. கழுத்தை நெரித்த கடன் பிரச்சனையில் சிக்கிய பரிதாபம்.. விபரீத முடிவெடுத்த குடும்பம்..


மேலும் படிக்க: Puducherry: பாஜக மாநில தலைவர் வாட்ஸ்அப்க்கு வந்த ஆபாச வீடியோ.. பணம் கேட்டு மிரட்டிய பெண்ணால் பரபரப்பு!