ராஜஸ்தான் அருகே ஜெய்ப்பூரில் கடன் பிரச்சனையால் மனமுடைந்த ஒருவர் அல்வாவில் விஷம் கலந்து கும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது மனைவி, மகன் உயிரிழந்தனர். 


ஜெய்ப்பூர் அருகே உள்ள பிரதாப் நர்கர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் சர்மா. இவர் மனைவி, குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே குடும்ப பிரச்சை இருந்துள்ளது. தொடர்ந்து, அதிக கடன் பிரச்சனையும் சேர்ந்துள்ளது. இதில் மனமுடைந்தவர் அல்வாவில் விஷம் கலந்து மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதில் சர்மாவின் மனைவி சாக்ஷி 5 மாத மகன் அதர்வ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் சர்மாவும் அவரது மகள் நியாவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.