உலகக் கோப்பை 2023 போட்டியின் முதல் ஆட்டம் அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கு முன்னதாக அக்டோபர் 4ம் தேதி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உலகக் கோப்பை தொடக்க விழா நடைபெற இருக்கிறது. இந்த நாளை ஐசிசி கேப்டன் தினமாக கொண்டாட ஐசிசி முடிவு செய்துள்ளது. உலகக் கோப்பைக்கு முன்னதாக அக்டோபர் 3ம் தேதி கடைசி பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ளது. 

தொடக்க விழா: 

அக்டோபர் 4ம் தேதி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் உலகக் கோப்பை தொடக்க விழாவில், அனைத்து அணிகளின் கேப்டன்களும் கலந்து கொள்வார்கள். இதன் போது வண்ணமயமான நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம்பெறும். இருப்பினும், அடுத்த நாள் அதாவது அக்டோபர் 5 முதல், உலகக் கோப்பை தொடங்கவுள்ளது. 

உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகள் மற்றும் கேப்டன்கள்

  • இந்தியா - ரோஹித் சர்மா
  • பாகிஸ்தான் - பாபர் அசாம்
  • இங்கிலாந்து - ஜோஸ் பட்லர்
  • ஆஸ்திரேலியா - பாட் கம்மின்ஸ்
  • நியூசிலாந்து - டாம் லாதம் (கேன் வில்லியம்சன் ஆடவில்லை என்றால்)
  • இலங்கை - தசுன் ஷங்கா
  • வங்கதேசம் - ஷகிப் அல் ஹசன்
  • நெதர்லாந்து- ஸ்காட் எட்வர்ட்ஸ்
  • தென்னாப்பிரிக்கா- டெம்பா பவுமா
  • ஆப்கானிஸ்தான்- ஹஸ்மத்துல்லா ஷாஹிடி

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியானது அக்டோபர் 8ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 14 ஆம் தேதி நேருக்கு நேர் மோதும் போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. அதே நேரத்தில், 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நவம்பர் 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்கள் அக்டோபர் 3 ஆம் தேதி முடிவடைவதால், அனைத்து கேப்டன்களும் அகமதாபாத்தில் வந்தடைவர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, 2023 உலகக் கோப்பை தொடக்க விழா அக்டோபர் 4ம் தேதி மாலையில் நடைபெறும். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை முடித்துக்கொண்டு அக்டோபர் 4-ம் தேதி காலை திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படுகிறார்.

தொடக்க விழாவில் ரசிகர்களை தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் பிசிசிஐயின் உயர் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நரேந்திர மோடி மைதான போட்டிகள்:
 

  1. அக்டோபர் 4 ஆம் தேதி தொடக்க விழா.
  2. அக்டோபர் 5- இங்கிலாந்து vs நியூசிலாந்து.
  3. அக்டோபர் 14 - இந்தியா vs பாகிஸ்தான்.
  4. நவம்பர் 4 - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா.
  5. நவம்பர் 10 -தென்னாப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான்
  6. நவம்பர் 19 - இறுதிப் போட்டி 

இந்தியா உலகக் கோப்பை அட்டவணை

போட்டி எண். தேதி அணி 1 அணி 2 இடம் நேரம்
5 அக்டோபர் 8 இந்தியா ஆஸ்திரேலியா MA Chidambaram Stadium, Chennai பிற்பகல் 2:00
8 அக்டோபர் 11 இந்தியா ஆப்கானிஸ்தான் அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி பிற்பகல் 2:00
13 அக்டோபர் 14 இந்தியா பாகிஸ்தான் நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத் பிற்பகல் 2:00
17 அக்டோபர் 19 இந்தியா வங்கதேசம் MCA ஸ்டேடியம், புனே பிற்பகல் 2:00
21 அக்டோபர் 22 இந்தியா நியூசிலாந்து HPCA ஸ்டேடியம், ஹைதராபாத் பிற்பகல் 2:00
29 அக்டோபர் 29 இந்தியா இங்கிலாந்து ஏகானா ஸ்டேடியம், லக்னோ பிற்பகல் 2:00
33 நவம்பர் 2 இந்தியா இலங்கை வான்கடே ஸ்டேடியம், மும்பை பிற்பகல் 2:00
37 நவம்பர் 5 இந்தியா தென்னாப்பிரிக்கா ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா பிற்பகல் 2:00
43 நவம்பர் 12 இந்தியா தகுதி 1 எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு பிற்பகல் 2:00