Puducherry: பாஜக மாநில தலைவர் வாட்ஸ்அப்க்கு வந்த ஆபாச வீடியோ.. பணம் கேட்டு மிரட்டிய பெண்ணால் பரபரப்பு!

மறுமுனையில் பேசிய ஒரு பெண் சாமிநாதனிடம் செல்போனில் ஆபாச வீடியோவில் பதிவான காட்சி இருப்பதாக கூறி ரூ.50 ஆயிரம் பணம் கேட் டார்.

Continues below advertisement

புதுச்சேரி : புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் (வயது 53). இவர் லாஸ்பேட்டை பெத்திச்செட்டிப்பேட் புதுத்தெருவில் வசித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களாக புதிய நம்பரில் இருந்து ஹலோ ஜி என தொடர்ந்து மெசேஜ் வந்துள்ளது. கட்சி நிர்வாகிகள் யாரோ மெசேஜ் அனுப்பி இருப்பதாக கருதி இதனை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த வாரம் அவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வீடியோ கால் ஒன்று வந்தது. அதனை சாமிநாதன் எடுத்த போது மறுமுனையில் இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடை ந்த அவர் உடனடியாக செல்போன் அழைப்பை துண்டித்தார். 

Continues below advertisement

அதையடுத்து அவரது செல்போன் எண்ணுக்கு மற்றொரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய ஒரு பெண் சாமிநாதனிடம் செல்போனில் ஆபாச வீடியோவில் பதிவான காட்சி இருப்பதாக கூறி ரூ.50 ஆயிரம் பணம் கேட் டார். பணம் கொடுக்க மறுத்தால் அந்த வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் சாமிநாதன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டிய மர்ம பெண்ணை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

புதுச்சேரி பாஜக மாநில தலைவரிடம் இளம் பெண் ஆபாச வீடியோ அனுப்பி பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சைபர்கிரைம் போலீசார் கூறுகையில், பொதுமக்கள் தங்களின் செல்போன் எண்களுக்கு, புதிய எண்களில் இருந்து வரும் வீடியோ கால்களை ஏற்க வேண்டாம். தற்போது ஆன்லைன் மோசடி கும்பல், வீடியோ கால் மூலமாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆபாச காட்சிகளை வைத்து எதிர் முனையில் இருப்பவர்கள் உரையாடுவது போல காட்சிகளை ஜோடிக்கிறார்கள். இதுபோல் யாரும் பாதிக் கப்பட்டால் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம். உடனடியாக சைபர் கிரைம் காவல்துறை எண் 1930-ல் புகார் அளியுங்கள் என தெரிவித்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola