மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், ஒன்பது வயது மாணவர்களை இரண்டு மாணவர்களை அடிக்கும் வீடியோ காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கணக்கு பாடத்தில் தவறு செய்ததற்காக அந்த சிறுமிகளில் கன்னத்தில் குறைந்தது ஆறு முறை அறைந்துள்ளார்.


மேலும் படிக்க : டிவி பார்க்க வந்த சிறுவனுக்கு ஆபாச வீடியோ காட்டிய வன்மம்.. 4 குழந்தைகளின் தாய் செய்த கொடூரம்..


வகுப்பறை நுழைவாயிலுக்கு அருகில் இருந்து எடுக்கப்பட்ட 57 வினாடி வீடியோவில், ஆசிரியர் ஜினேந்திர மோக்ரா, 3 வகுப்பு மாணவர்களில் ஒருவரை அழைத்து எண்களை சொல்லச் சொல்கிறார். அந்த சிறுமி 34 வரை சரியாக சொல்லி 35 என்று எண்களுக்கு பிறகு தடுமாறும்போது, ஆசிரியர் அந்த சிறுமியை டக்கென்று இழுத்து பளார் பளார் என்று அறைகிறார். தொடர்ந்து சிறுமியின் பின்னந்தலையிலும் அடிக்கிறார். 



அந்த சிறுமி தன் இருக்கைக்குத் திரும்பிச் செல்லும்போது, ஆசிரியர் பின்தொடர்ந்து விரைந்து சென்று மீண்டும் தலையில் அடிக்கிறார். தொடர்ச்சியாக அந்த சிறுமியை திட்டவும் செய்கிறார். மற்ற மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதேபோல் மற்றொரு சிறுமியையும் தாக்கியுள்ளார். வகுப்பில் சுமார் 15 மாணவர்கள் உள்ளனர். அனைவரும் பெஞ்சுகள் இல்லாததால் தரையில் அமர்ந்துள்ளனர்.


ரத்லமின் பிப்லோடா சப்-டிவிஷனில் உள்ள மாமத் கெடா கிராமத்தில் உள்ள அரசு பெண்கள் ஆரம்பப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் கே.சி.சர்மா தெரிவித்தார்.


மேலும் படிக்க : பளுதூக்குதலில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் : வெள்ளி பதக்கத்தை வென்ற பிந்த்யாராணி! யார் இவர்?


"மாணவர்களை படிக்க வைக்க இது எந்த வழியும் ஒன்று மட்டும் இல்லை. சிறந்த வழிகள் எவ்வளவோ உள்ளன. ஆசிரியர் தான் தவறு செய்ததை ஏற்றுக்கொண்டார்" என்று மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு எதிரான இது மாதிரியான தாக்குதல் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக குழந்தைகள் மீதான தாக்குதல் குறித்து உடனடியான தீர்வு வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண