காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவின் பிந்த்யாராணி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார். மகளிர் 55 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி பிந்த்யாராணி தேவி வெள்ளி பதக்கம் வென்றார். 


காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான 55 கிலோ பிரிவில் க்ளீன் அண்ட் ஜெர்க் சுற்றில் ஸ்னாட்ச் சுற்றில் மூன்றாவது முயற்சியில் 86 கிலோ எடையையும், இறுதி முயற்சியில் 116 கிலோ தூக்குதலையும் வெற்றிகரமாகத் தூக்கி இந்தியாவின் நான்காவது பளுதூக்குதல் பதக்கத்தை பிந்த்யாராணி தேவி வென்றார்.


வெள்ளிப்பதக்கம் வென்ற பிறகு பேசிய பிந்த்யாராணி தேவி, ”வெள்ளிப் பதக்கம் வென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பங்கேற்ற முதல் காமன்வெல்த் போட்டியில் விளையாடி முதல் முறையாக வெள்ளி வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இன்று எனது வாழ்க்கையின் சிறந்த ஆட்டம். தங்கம் என் கையிலிருந்து நழுவியது. எப்போது நான் மேடையில் இருந்தேன், நான் மையத்தில் இல்லை, அடுத்த முறை சிறப்பாக செயல்படுவேன்." என்று தெரிவித்தார். 






தொடர்ந்து பேசிய அவர், “2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன். எனது அடுத்த இலக்கு தேசிய விளையாட்டுகள், உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டுகள் மற்றும் 2024 பாரிஸ் ஒலிம்பிக். அவற்றில் நான் சிறப்பாக செயல்படுவேன்” என்றும் குறிப்பிட்டார்.


பெண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் பிந்தியாராணி தேவி தனது முதல் ஸ்னாட்ச் முயற்சியில் 81 கிலோ எடையையும், தனது இரண்டாவது முயற்சியில் 84 கிலோ எடையையும் அசால்ட்டாக தூக்கி சாதனை படைத்தார். பிந்தியாராணி தனது இறுதி மற்றும் மூன்றாவது முயற்சியில் 86 கிலோ ஸ்னாட்சை தூக்கினார்.


தொடர்ச்சியாக, கிளீன் அண்ட் ஜெர்க் லிப்ட் பிரிவில் முதல் முயற்சியிலேயே 110 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்தார். 114 கிலோ எடைக்கான இரண்டாவது முயற்சியில், அவர் அதைத் தூக்க முடியவில்லை. 116 கிலோ எடைப்பிரிவின் இறுதி முயற்சியில், அதை எளிதாக தூக்கி இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தையும், ஒட்டுமொத்தமாக நான்காவது இடத்தையும் பிடித்தார்.


இந்திய பளுதூக்கும் வீராங்கனை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் தனது இறுதியான கிளீன் அண்ட் ஜெர்க் லிஃப்ட் மூலம் சாதனை படைத்தார். நைஜீரியாவின் ஆதிஜத் அடெனிகே ஒலாரினோய், பிந்த்யாராணி தேவியை விட ஒன்று கூடுதலாக 203 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண