ஆந்திராவில் டிவி பார்க்க வந்த 15 வயது சிறுவனுக்கு ஆபாச வீடியோ காட்டிய 4 குழந்தைகளின் தாய் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 


அம்மாநில மக்களை அதிர வைத்துள்ள இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணா நகர் இன்ஸ்பெக்டர் துர்கா ராவ் கூறியதாவது: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா குட்மேன் பேட்டையைச்  சேர்ந்த  ஸ்வப்னா என்பவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், குழந்தைகளுடன் ஸ்வப்னா தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே இவரின் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த குடும்பத்தில் இருந்த 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் டிவி பார்க்க அடிக்கடி ஸ்வப்னா வீட்டுக்கு வந்துள்ளார். 


இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுவனை தனது வலையில் வீழ்த்த நினைத்த அவர், நைசாக பேசி ஆபாச வீடியோ காட்டி உணர்ச்சியை தூண்டியுள்ளார். மேலும் சிறுவனுடன் ஸ்வப்னா பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது பல மாதங்களாக தொடர்ந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் எனது கணவர், குழந்தைகளை நான் விட்டு விட்டு வந்து விடுகிறேன். நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோம் என சிறுவனுக்கு மூளைச்சலவை செய்துள்ளார். இதற்கு சிறுவனும் சம்மதிக்க கடந்த 19-ஆம் தேதி இருவரும் ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார். அங்கு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். 


இதற்கிடையில் கடந்த ஜூலை 25-ஆம் தேதி சிறுவனை காணவில்லை என கூறி அவனது தந்தை போலீசில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் அடிக்கடி செல்லும் வீட்டில் உள்ள ஸ்வப்னாவும் காணாமல்போனது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஸ்வப்னாவின் செல்போனின் ஆய்வு செய்தனர். இதில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பாலாநகரில் செயல்படும் லாட்ஜில் அவர் சிறுவனுடன் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஸ்வப்னாவை கைது செய்து குடிவாடாவுக்கு அழைத்து வந்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இன்ஸ்பெக்டர் துர்கா ராவ்  தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண