தமிழ்நாடு :

  • ஒற்றை பண்பாட்டை திணித்து இந்திய ஒற்றுமையை சிதைக்க முயற்சி : முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு 
  • எடப்பாடி துறையில் ரூ.692 கோடி ஊழல் புகார் : கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை 
  • கனியாமூர் மாணவ, மாணவிகளுக்கு வேறு பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் 
  • தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல் 
  • தேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சி கூட்டம் : ஓபிஎஸ், இபிஎஸ் அனி பங்கேற்க அனுமதி 
  • விசாரணை கைதி மரண வழக்கில் ஐ.சி.எஃப் போலீஸ் மீது கொலை வழக்கு பதிவுசெய்ய உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
  • கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: பள்ளி கலவரத்தில் போலீசார் மீது கற்கள் வீசிய வாலிபர்கள் மற்றும் வாட்ஸ் அப் அட்மின் உட்பட 6 பேர் கைது
  • மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 22,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்தியா : 

  • வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள், தவறினால் ரூ. 5000 அபராதம் : மத்திய அரசு அறிவிப்பு 
  • மின்சார நிறுவனங்களுக்கு தர வேண்டிய ரூ. 2.5 லட்சம் கோடியை உடனே செலுத்துங்கள் : மாநிலங்களுக்கு மோடி வலியுறுத்தல்
  • நீதி எளிதாக கிடைக்க வேண்டும் : விசாரணை கைதிகள் விடுதலையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி அழைப்பு 
  • இந்தியாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்ட நபர் குணமடைந்தார் : கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் 
  • போதைப்பொருள் பிரச்சனை தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது : உள்துறை அமைச்சர் அமித்ஷா 

உலகம் : 

  • வெள்ளதால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கடற்படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழை காரணமாக 7 பேர் உயிரிழப்பு
  • இலங்கைக்கு மேலும் நிதி உதவிகளை வழங்கப் போவதில்லை உலக வங்கி அதிரடி அறிவிப்பு
  • பாகிஸ்தான் பலுசிஸ்தானின் துர்பத்தில் உள்ள மைதானத்தில் கால்பந்து போட்டியின் போது பலத்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

விளையாட்டு :

  • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் : பளுதூக்குதலில் வெள்ளி வென்ற சன்கித் சர்கார்
  • காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் 61 கிலோ எடைப்பிரிவில் குருராஜா வெண்கலப் பதக்கம் வென்றார்
  • செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இரண்டாவது சுற்றில் 5 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
  • ஜிம்பாவே தொடருக்கான ஒரு நாள் தொடருக்கான ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
  • 44 வது செஸ் ஒலிம்பியாட்டில் மிகவும் இளம் வயது போட்டியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பாலஸ்தீனை சேர்ந்த 8 வயதான வீராங்கனை செடர் ராண்டா

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண