மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, மூவலூர் மகாதானபுரம் கூட்டுறவு நகர் பகுதியில் சேர்ந்தவர் முருகேசன் என்பவர் 19 வயதான மகள் ஹரிணி. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வருகிறார். மயிலாடுதுறை கூறைநாடு பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரின் 25 வயதான மகன் தீபன். இவர் மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். 




இந்நிலையில் ஹரிணி தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய  தீபன் கடைக்கு செல்வது வழக்கம், அவ்வாறு சென்று வந்த ஹரிணிக்கும், தீபனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.  இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்வீட்டார் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.  இதனையடுத்து கடந்த 24 -ஆம் தேதி இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் கடலூருக்கு சென்று அங்கே பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளனர்.


Madras High Court : உயர்நீதிமன்ற கோடை கால அமர்வுகள் அறிவிப்பு... எந்தெந்த நாட்களில் விசாரணை? முழு விவரம்...!




இந்த சூழலில் மகளை காணவில்லை என ஹரிணி பெற்றோர் பல இடங்களில் விசாரித்துள்ளனர். அதனை தொடர்ந்து மாற்று சமூகத்தை சேர்ந்தவருடன் ஹரிணி சென்றதை அறிந்து ஆத்திரமடைந்த பெற்றோர் குத்தாலம் காவல்நிலையத்தில் தனது பெண் கடத்தப்பட்டுள்ளதாக தீபன் குடும்பத்தினர் மீது புகார் அளித்தனர். புகாரின் பேரில் குத்தாலம் காவல்துறையினர் தீபன் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனை அறிந்த  தீபன் ஹரினி ஜோடியினர் நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர் உதவியுடன் மயிலாடுதுறை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா விடுமுறையில் இருப்பதால்,  தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சதீஷ் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.


Ponniyin Selvan 2 Twitter Review: நாவல் முழுமை பெற்றதா? .. பொன்னியின் செல்வன்-2 ரசிகர்களை கவர்ந்ததா? .. ட்விட்டர் விமர்சனம் இதோ..!




அப்போது திருமண வயது குறித்து விசாரித்தபோது இருவரும் படிப்பு சான்றிதழ்களை அளித்ததுடன், திருமணபதிவு சான்றிதழையும் கொடுத்துள்ளனர். அனைத்தையும் சரிபார்த்த காவல்துறையினர், இந்த இளம் ஜோடிகள் தங்கள் சுய விருப்பத்தின்பேரில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து, ஹரிணி தன் காதல் கணவருடன் செல்ல விரும்பியதால் காவல்துறை பாதுகாப்புடன் அவர்களை தீபனுடன் அனுப்பி வைத்தனர்.  தீபன் ஹரினி ஜோடியினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து காரில் செல்லும்போது பெண்ணின் பெற்றோர் ஆவேசப்பட்டு சுமார் 2 கி.மீ தூரம்வரை பின் தொடர்ந்து பின்னர் ஒரு கட்டத்தில் பாதியில் திரும்பிச் சென்றனர்.


Share Market : தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை...60 ஆயிரம் புள்ளிகளில் சென்செக்ஸ்...!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண